Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
6th Tamil January 2nd Week Notes Of Lesson
6th Standard Tamil January Month 2nd week notes of lesson 2023.
6th Tamil January 2nd Week Notes Of Lesson
- நாள் : 09-01-2023 முதல் 13-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : இரண்டாம் வாரம்
- வகுப்பு : ஆறாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. வேலுநாச்சியார், 2. நால்வகைச்சொற்கள்
அறிமுகம் :
- சுதந்திர போராட்ட கதைகளைக் கூறி ஆர்வ மூட்டல்
- சில சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் வகைகளை கூறி ஆர்வ மூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
- காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
- விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.
- சொற்களின் வகை அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
- பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
- பெண்களின் வீரத்தைக் கூறல்
- வேலுநாச்சியார் வீர தீர செயல்களைப் போற்றுதல்
- வரலாற்று நிகழ்வுகளை காணொலி வாயிலாக காண்பித்தல்
- நால்வகைச் சொற்களைப் பற்றிக் கூறல்
- சொற்கள் இடம் பெறும் தன்மையைப் பற்றிக் கூறல்.
- நடைமுறை வாழ்வில் இவ்வகைச் சொற்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் எனக் கூறல்
கருத்துரு வரைபடம் :
வேலுநாச்சியார்
நால்வகைச்சொற்கள்
விளக்கம் :
வேலுநாச்சியார்
- விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களுள் ஒருவர் வேலுநாச்சியார்ப் பற்றி அறிதல்
- பெயர் : வேலுநாச்சியார்
- தந்தை பெயர் : இராமநாத புர மன்னர் – செல்லமுத்து
- கணவர் : முத்து வடுக நாதர் ( சிவகங்கை மன்னர் )
- வேலு நாச்சியார் படை தளபதிகள் : பெரிய மருது, சின்ன மருது
- வேலுநாச்சியாருக்கு தமது படைகளை அனுப்பியவர் : ஐதர் அலி
- வேலுநாச்சியாரின் அமைச்சர் : தாண்டவராயர்
- வேலுநாச்சியார் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் : குயிலி
- நடுகல் : உடையாள்
- வேலுநாச்சியாரின் காலம் 1730-1796
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.
- ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்
நால்வகைச் சொற்கள்
- ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
- இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்
- வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
- பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது
- பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
காணொளிகள் :
- விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
- பாடப்பகுதியினை வாசித்தல்
- சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
- சுதந்திரத்தின் மகத்துவம் அறிதல்
- பெண்களின் வீரத்தைப் போற்றுதல்
- நடுகல் போன்ற சொற்களின் பொருள்களை அறிதல்
- நால்வகைச் சொற்கள் பற்றி அறிதல்
- நால்வகைச்சொற்களின் பயன்பாடு பற்றி அறிதல்
- நால்வகைச் சொற்களை இன்று பயன்படுத்தும் விதம் அறிதல்
மதிப்பீடு :
LOT :
- வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு____________
- இலக்கண வகையால் சொற்கள் __________ வகைப்படும்.
MOT :
- வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் யாவை?
- நால்வகைச் சொற்களுக்கும் உதாரணங்களைக் கூறுக
HOT
- பெண்கள் இன்றைய சூழலில் எதற்கு எதிராக போராட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
- நால்வகைச் சொற்களும் இடம் பெறுமாறு 5 தொடர்களைக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
வேலுநாச்சியார்
- T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்
நால்வகைச்சொற்கள்
- T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எழுதுதல்.
தொடர் பணி :
- பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை எழுதி வருக
- அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் நால்வகைச் சொற்களின் வகைகளைக் கண்டறிதல்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.