Temporary Teachers Pay Allotment தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வந்துவிட்டது எப்போது வழங்கப்படும்? மாவட்ட வாரியாக ஒதுக்கீடு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வந்துவிட்டது எப்போது வழங்கப்படும்? மாவட்ட வாரியாக ஒதுக்கீடு!

Temporary teachers salary list 2023
Temporary Teachers salary in District wise 


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.34067/சி2/2/2022, நாள்: 09.01.2023.

பொருள்:

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் - 2022- 2023 ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் - நேரடி நியமனம் ? பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் கணிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் (Honorar வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு ரூ. 100,01,52000/- அசளவில் ஆணை பெறப்பட்டமை நிதி ஒதுக்கீடு மட்ட வாரியாக பகிர்ந்தளித்தல்-ஆணை வழங்குதல் - சார்பு


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள். பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அவற்றுள் மூத்த பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் பதிலியாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000/- ரூ.15,000/-, ரூ.18,000/- என நிர்ணயிக்கப்பட்டு பார்வை 54 கண்டுள்ள அரசாணையில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கப்படும் தொகையினை முதன்மைக் கல்வி அலுவவர்கள் தொடக்கக் கல்வித் துறையை பொறுத்தமட்டில், IFHRMS மூலமாக தனது ஆளுகைக்குட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (BEOs) பகிர்ந்தளிக்க வேண்டும். எனவும், பள்ளிக் கல்வித் துறையில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு IFHRMS மூலமாக தொகையினை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் தொகையினை டிசம்பர் 2022 மாதம் வரையிலான ஊதியத்தினை உடனடியாக தற்காலிக ஆசிரியர்களுக்கு பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனவரி 2023 மற்றும் பிப்ரவரி 2023 மாதங்களுக்குரிய ஊதியத்தினை அந்தந்த மாதம் முடிந்த பின்னர் அடுத்த மாத முதல் தேதியில் (எ.கா; ஜனவரி 2023 மாதத்திற்கு பிப்ரவரி 5ம் தேதிக்குள்ளும், பிப்ரவரி 2023 மாதத்திற்கு மார்ச் 5ஆம் தேதிக்குள்ளும் ) ஊதியம் பெற்று வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.