Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil January 2nd Week Notes Of Lesson
8th Standard Tamil January Month 2nd week notes of lesson 2023.
8th Tamil January 2nd Week Notes Of Lesson
- நாள் : 09-01-2023 முதல் 13-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : இரண்டாம் வாரம்
- வகுப்பு : எட்டாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. சட்டமேதை அம்பேத்கர்
அறிமுகம் :
மனிதர்களிடையே தகராறு வந்தால் அது தீர்க்கும் இடம் எது? எப்படி தீர்வு கிடைக்கும் என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன் மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
- சட்டம் என்றால் என்ன என்பது பற்றிக் கூறல்
- சட்டம் மனித வாழ்க்கைக்கு முக்கியம் என்பதனை உணர்த்துதல்
- சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பற்றிக் கூறல்
- அம்பேத்கர் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறல்
- அம்பேத்கரின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் :
சட்ட மேதை அம்பேத்கர்
விளக்கம் :
( தொகுத்தல் )
சட்டமேதை அம்பேத்கர்
- இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
- பிறப்பு : 14-04-1891
- பெற்றோர் : ராம்ஜி சக்பால் - பீமாபாய்
- 1907 – பள்ளிப்படிப்பு
- 1912 – இளங்கலை பட்டம்
- 1920 – பொருளாதார பட்டம்
- 1924 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை
- காந்தியடிகளுக்கும், அம்பேத்கருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம்.
- சுதந்திர தொழிலாளர் கட்சி ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்காக தொடங்கினார்.
- சமத்துவ சமுதாயத்திற்காக சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்.
- அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.
- புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூலை எழுதினார்.
- 1990-இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
காணொலிகள் :
- விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
- புதிய வார்த்தைகளைக் காணுதல்
- புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்
- அம்பேத்கரைப் பற்றி அறிதல்
- சட்டம் பற்றிய புரிதல் கொள்ளுதல்
- அம்பேத்கர் மக்களுக்கு ஆற்றியப் பணிகளை அறிதல்
- இந்திய நாட்டின் சட்டம் பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து இயற்றப்பட்டது என்பதன அறிதல்
மதிப்பீடு :
LOT :
- அம்பேத்கர் இயற்பெயர் யாது? ________
- அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
MOT
- அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?
- வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
HOT
- பூனா ஒப்பந்தம் பற்றிக் கூறுக
- பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
கற்றல் விளைவுகள் :
சட்டமேதை அம்பேத்கர்
- T801 மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப் பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றை படித்து கலந்துரையாட செய்தல்
- T808 ஒரு கட்டுரையை படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் ,சில வினாக்களுக்கு விடை காண முற்படல்
- T809 படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்
தொடர் பணி :
- மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக.
- சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.