Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
7th Tamil January 2nd Week Notes Of Lesson
7th Standard Tamil January Month 2nd week notes of lesson 2023.
7th Tamil January 2nd Week Notes Of Lesson
- நாள் : 09-01-2023 முதல் 13-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : இரண்டாம் வாரம்
- வகுப்பு : ஏழாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, 2. திருநெல்வேலிச்சீமையும் கவிகளும்
அறிமுகம் :
- ஒவ்வொருப் பொருளுக்கும் புகழ்ப்பெற்ற ஊரின் பெயர்களைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.
- முன்னர் கற்ற பாடத்திலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக் கருவிகள் :
- கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
- திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும், சிறப்பையும் அறிதல்
- கருத்துகளைத் தொகுத்து கடிதம் எழுதும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
- பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்
- திருநெல்வேலி மாவட்டத்தின் பெயர்க் காரணம் கூறல்
- திருநெல்வேலியில் உள்ள சிறப்புகளைக் கூறல்
- திருநெல்வேலியை இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்
- திருநெல்வேலியைப் பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்
- திருநெல்வேலி கவிகளைப் பற்றிக் கூறல்
- நகரத்தின் சிறப்பை உணர்ந்து போற்றுதல்
நினைவு வரைபடம் :
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
திருநெல்வேலி சீமையும் கவிகளும்
விளக்கம் :
( தொகுத்தல் )
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- வேணுவனம் என்பது திருநெல்வேலியின் முந்தையப் பெயர். வேணுவனம் என்பது மூங்கில் காடு
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
- திருநெல்வேலி மாவட்டம் மலைகள் நிறைந்தப் பகுதி
- திருநெல்வேலியை வளம் செழிக்க வைக்கும் ஆறு தாமிரபரணி
- பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது உழவுத்தொழில்
- நகரின் நடுவே நெல்லையப்பர் கோவில் உள்ளது.
- அகத்தியர் போன்றோரை தந்து தமிழுக்கு பெருமைச் சேர்த்துள்ளது திருநெல்வேலி
- அயல்நாட்டு அறிஞர்கள் ஜி.யு,போப்,கால்டுவெல் போன்றோரையும் ஈர்த்துள்ளது
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
- பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டையபுரம்
- தேசிக விநாயகனார் தமிழை ஆழமாகவும் அழுத்தமாகவும் கற்ற இடம் திருநெல்வேலி
- தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடம் சீவலப்பேரி என்னும் முக்கூடல்
- பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதியை தரிசித்தார்.
- காவடிச்சிந்துவைப் பாடியவர் அண்ணாமலையார்.
- நுண்துளி தூங்கும் குற்றாலம் – என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
- குற்றாலகுறவஞ்சியை திரிகூடராசப்பக்கவிராயர் பாடியுள்ளார்
காணொளிகள் :
- விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
- உரைப்பத்தியினை வாசித்தல்
- திருநெல்வேலி பெயர்க்காரணம் அறிதல்
- திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்
- திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும் இயற்கை வளங்களை அறிதல்
- உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள் அறிதல்
- திருநெல்வேலியில் வாழ்ந்த கவிகள் பற்றி அறிதல்
- திருநெல்வேலிக்கு சென்று வந்த புலவர்கள் பற்றி அறிதல்
- திருநெல்வேலி சிறப்புகளைப் பாடும் இலக்கியங்களை அறிதல்
மதிப்பீடு :
LOT :
- திருநெல்வேலி ______ மன்னர்களோடு தொடர்புடையது
- குற்றால குறவஞ்சியைப் பாடியவர் ________
MOT
- திருநெல்வேலி முந்தைய பெயர் யாது? அதன் பொருள் என்ன?
- முக்கூடல் பற்றிக் கூறுக
HOT:
- மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும்?
- உங்களுக்குப் பிடித்த ஒன்றை கவிதையாக கூறுக.
கற்றல் விளைவுகள் :
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள்
- எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
திருநெல்வேலி சீமையும் கவிகளும்
- T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
தொடர் பணி :
- பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்.
- உங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பெயர்களை எழுதி வருக.
- உங்கள் ஊரின் சிறப்பை ஒரு பக்க அளவில் எழுதி வருக.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.