8th Tamil Unit 5 Book Back Answer இயல் 5.1 வளம்பெருகுக

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Unit 5 Book Back Answer இயல் 5.1 வளம்பெருகுக

8th Standard Tamil Lesson 5 Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.


கற்பவை கற்றபின்

1. உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

மண்பாண்டத் தொழில் :

குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களிலிருந்து களிமண்ணை எடுத்து வருவர், பெரிய பள்ளம் தோண்டி அதில் களிமண்ணை நிரப்பி தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பர். பிறகு அதனுடன் மெல்லிய மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவார்கள். பிறகு பானை செய்யும் சக்கரத்தில் வைத்து வேண்டிய வடிவங்களில் அதை உருவாக்குவார்கள். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காய வைப்பர்.


ஓரளவுகாய்ந்ததும், தட்டுப்பலகை கொண்டுதட்டி பானையின் அடிப்பகுதியில் இருக்கும் ஓட்டையை மூடி பானையை முழுமையாக்குகின்றனர். பிறகு உருட்டுக்கல் கொண்டு தேய்த்து பானையைப் பளபளபாக்குகின்றனர். பிறகு வண்ணங்களையும், ஓவியங்களையும் தகுந்தாற்போல வரைகின்றனர்.


மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………………. எல்லாம் முளைத்தன.

  • ஈ) வித்துகள்


2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு …………………… பெருகிற்று.

  • இ) வாரி


3. ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

  • அ) அ + களத்து


4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….

  • இ) கதிரீன

 

 

குறுவினா

1.பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர தேவையானது எது?

  • சரியான நேரத்தில் பெய்யும் மழை


2.உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

  • உழவர்கள் நெல்லைப் பிரித்து எடுக்கும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர்.

 

சிறுவினா

1.உழவுத் தொழில் பற்றி தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

  • மழையால் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளன.
  • அதனை அறுவடை செய்து அடித்து நெல்லாக பிரித்து எடுக்கின்றனர்.

 

சிந்தனை வினா

1. உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

உழவுத் தொழில் உயிர் தொழில்:

நாகரீகம் என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. 

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம் உழவுத் தொழில் செய்தல் வேண்டும். உழவுத் தொழில், அரசுப் பணிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும். 

உழவுத் தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க வேண்டும். 

இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப் பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு செய்தால் மட்டுமே உழவுத் தொழில் நிச்சயம் சிறக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.