Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Unit 4.5 Book Back Answer இயல் 4.5 திருக்குறள்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials
Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State
Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan &
Study Tips.
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அரசரை அவரது …………………… காப்பாற்றும்.
- இ) குற்றமற்ற ஆட்சி
2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து
பேசவேண்டும்.
- ஆ) அவையின்
3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- அ) கண் + ஓடாது
4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
- ஈ) கசடு + அற
5. ‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
- அ) என்றாய்ந்து
குறுவினா
1.நன்மை தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழியாது?
- செயலைச் சரியாக முடிப்பவரை ஆராய்ந்து ஒப்படைத்தல்.
2.சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருவள்ளுவர் கூறுவது யாது?
- நடுவு நிலைமையில் ஆட்சி செய்தல்
3.அரசின் தண்டிக்கும் முறை யாது?
- குற்றத்தை ஆராய்ந்து, குற்றம் மீண்டும் நடைபெறாது தண்டிப்பது.
4.சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
- கேட்காத வரையும் கேட்க வைத்தல்
5.சொற்பொருள் பின்வருநிலை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
- சொல்லுக சொல்லை... என்ற குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி வந்துள்ளது.
- சொல் என்ற ஒரே சொல், ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கலைக்குழுத் தலைவரைத்
தேர்ந்தெடுப்பது பற்றிப் பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனைப்
பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் 'செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால்,
இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும்
ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே, என்னுடைய தேர்வு கலையரசன்' என்று
நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் 'சிறந்த தேர்வு' என்று
மகிழ்ந்தனர்.
1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
விடைகுறிப்பு:
2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.