8th Tamil Book Back Answer Unit 4 - இயல் 4.4 எச்சம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Book Back Answer Unit 4 - இயல் 4.4 எச்சம்

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.
8th Tamil Book Back Answer Unit 4 - இயல் 4.4 எச்சம்


கற்பவை கற்றபின்

1. ‘வந்த’ – என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
எ.கா: வந்த மாணவன்
வந்த மாடு
  • வந்த கபிலன்
  • வந்த தண்ணீர்
  • வந்த கோகிலா
  • வந்த கற்கள்
  • வந்த மக்கள்
    
2. ‘வரைந்து’ – என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
எ.கா: வரைந்து வந்தான்
வரைந்து முடித்தான்
  • வரைந்து போனாள்
  • வரைந்து விளக்கினேன்
  • வரைந்து நடித்தான்
  • வரைந்து கூறினாய்
 

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.
  • ஆ) எச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………
  • ஈ) பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.
  • அ) காலத்தை

பொருத்துக.
1. நடந்து - அ. முற்றெச்சம்
2. பேசிய - ஆ. குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் - இ.  பெயரெச்சம்
4. பெரிய - ஈ.  வினையெச்சம்

விடைகுறிப்பு:
1. நடந்து - ஈ) வினையெச்சம்
2. பேசிய - இ) பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் - அ) முற்றெச்சம்
4. பெரிய - ஆ)  குறிப்புப் பெயரெச்சம்
 

கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
 
பெயரெச்சம்: நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த.
வினையெச்சம்: படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பார்த்து.
 
 

சிறுவினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  • பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் ஆகும்.
பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும்.

2. அழகிய மரம் -எச்ச வகை விளக்கு.

  • 'அழகிய மரம்' எச்ச வகை: குறிப்பு பெயரெச்சம்
  • பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டுவதால் குறிப்பு பெயரெச்சம்.

3.முற்றெச்சத்தை சான்றுடன் விளக்குக.

  • ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் ஆகும்.
  • சான்று: படித்தனர் மகிழ்ந்தனர்

4.வினையெச்சத்தின் வகைகளை விளக்கு.

  • வினை எச்சம் இரண்டு வகைப்படும்.
  • 1.தெரிநிலை வினையெச்சம் 
  • 2.குறிப்பு வினையெச்சம்  

மொழியை ஆள்வோம்

கேட்க
1. கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒளிப்பதிவைக் கேட்டு மகிழ்க.      
   
கீழ்காணும் தலைப்பில்  இரண்டு நிமிடம் பேசுக.   
1. கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்.   
2. இதயம் கவரும் இசை.
     

பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகவரிசைப்படுத்துக  

1. படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி.
விடைகுறிப்பு:
உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், படகம், பிடில், பேரியாழ், 
நாகசுரம், மகுடி.
 

தொடர் வகைகள்

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.____________
2. கடமையைச் செய்________________
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!_____________________
4. நீங்கள் எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள்?____________________

விடை:

1. செய்தித்தொடர் 
2. விழைவுத்தொடர் 
3. உணர்ச்சித்தொடர்
4. வினாத்தொடர்
 

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
3.அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
4. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)  

விடை:

1. ஆ! காட்டின் அழகுதான் என்னே!
2. பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.
3. அதிகாலையில் துயில் எழு.
4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?
 

இணைச்சொற்கள் 

சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, ஆடி அசைந்து)

1. சான்றோர் எனப்படுபவர்____________களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் ____________ பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் _______________வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ___________ இல்லை.
5. திருவிழாவில் யானை __________ வந்தது. 

விடை:
  • 1. கல்விகேள்வி 
  • 2. மேடுபள்ளம்
  • 3. போற்றிப்புகழப்பட
  • 4. ஈடுஇணை  
  • 5. ஆடி அசைந்து  
 

கடிதம்

இருப்பிடச் சான்றிதழ் வேண்டி வட்டாச்சியருக்கு விண்ணப்பம்எழுதுக. 

நிற்க அதற்குத்தக

படிப்ப்போம், பயன்படுத்துவோம்!

  • கைவினைப் பொருள்கள் - Crafts
  • பின்னுதல் - Knitting
  • புல்லாங்குழல் - Flute
  • கொம்பு - Horn
  • முரசு - Drum
  • கைவினைஞர் - Artisan
  • கூடைமுடைதல் - Basketry
  • சடங்கு -Rite

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.