8th Tamil Book Back Answer Unit 4 | இயல் 4.2 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Unit 4.2 Book Back Answer இயல் 4.2 நாட்டுப்புறக்கைவினைக் கலைகள்

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.

8th Tamil Book Back Answer Unit 4
8th Tamil Book Back Answer Unit 4.2


மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………………
  • இ) பனையோலைகள்

2. பானை ………………….. ஒரு சிறந்த கலையாகும்.
  • ஆ) வனைதல்

3. ‘மட்டுமல்ல’ எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
  • ஈ) மட்டும்+அல்ல

4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
  • அ) கயிற்றுக்கட்டில்

 
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  • 1. முழுவதும் – பாடநூல் முழுவதும் வாசித்தால்தான் தெளிவு கிடைக்கும்.
  • 2. மட்டுமல்லாமல் – ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்.
  • 3. அழகுக்காக – பல அரங்குகளில் சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள்.
  • 4. முன்பெல்லாம் – முன்பெல்லாம் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்தினார்கள்.  

 

குறுவினா

1. எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் என்று கூறுகிறோம்?
  • மண் பொம்மை,மரப் பொம்மை ஆகியவை செய்தல், மூங்கில், பிரம்பு,மணல் ஆகியவற்றின் மூலம் பொருள் செய்தல். 

2. மண்பாண்டம்,சுடுமண் சிற்பம் ஒப்பிடுக.
  • களிமண்ணை ஊறவைத்து சக்கரத்தில் வைத்து பொருள் செய்வது. 
  • மண்பாண்டம் களிமண்ணால் செய்த பொருள்களைச் சுட்டெரித்து செய்யப்படுபவை சுடுமண் சிற்பங்கள்.

3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை? 
  • கிளுகிளுப்பை, பொம்மை, தொப்பி, கயிறு, கட்டில். 
 

சிறுவினா

1.தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகளை எழுதுக.

  • சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • கண்டியூரில் மண்கலன்கள் கிடைத்துள்ளன.
  • கீழடியில் சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.


2.மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
  • தட்டு, கூடை, முறம், ஏணி,துடைப்பம் கட்டில்,
 

நெடுவினா

1. தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத்  தொகுத்து எழுதுக.

  • சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • கண்டியூரில் மண்கலன்கள் கிடைத்துள்ளன.
  • கீழடியில் சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.
  • பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள்: கிளுகிளுப்பை,பொம்மை,தொப்பி, கயிறு,  கட்டில்.
  • மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் : 
  • தட்டு. கூடை முறம், ஏணி துடைப்பம் கட்டில்.
  • பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறை:
  • நெருப்பில் காட்டி, சூடுபடுத்தி கம்பி போல வளைத்து பிறகு தேவையான பொருள் செய்யலாம்.

சிந்தனை வினா

1. கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.

  • கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருளால் தயாரிக்கப் படுபவை.
  • செயற்கையான பொருளோ தீங்கு விளைவிக்கும் இரசாயனமோ இதில் பயன்படுத்தப்படுவது இல்லை.
  • இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றை முதன்மைப் பொருளாகக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • கைவினைக் கலைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களின் மீதத்தைப் பூமியில் புதைத்தாலும், அவை மக்கி விடும். இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.