Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Unit 4.1 Book Back Answer இயல் 4.1 திருக்கேதாரம்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials
Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State
Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan &
Study Tips.
8th STD Tamil Unit 4 - இயல் 4.1 திருக்கேதாரம்
கற்பவை கற்றபின்
1. தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
திருஞானசம்பந்தர் :
- இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
- பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
- ஊர் – சீர்காழி
- தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.
- சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.
திருநாவுக்கரசர் :
- இயற்பெயர் – மருள்நீக்கியார்
- சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
- பெற்றோர் – புகழனார், மாதினியார்.
- தமக்கை – திலகவதியார்
- பிறந்த ஊர் – திருவாமூர்
- இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சுந்தரர் :
- பிறந்த ஊர் – திருநாவலூர்
- பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
- இயற்பெயர் – நம்பியாரூரர்
- சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.
- இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காட்டிலிருந்து வந்த ____________ கரும்பைத் தின்றன.
- இ) வேழங்கள்
2. 'கனகச்சுனை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- இ கனகம் + சுனை
3.முழவு + அதிர என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________.
- இ முழவதிர
குறுவினா
1.தமிழர் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாக சுந்தரர் கூறுவன
யாவை?
- புல்லாங்குழல் மற்றும் முழவு
சிறுவினா
1. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு பரணி வருணனை செய்கிறார்?
- தமிழ்ப் பாடலுக்குப் புல்லாங்குழலும் முழவும் ஒலிக்கும்.
- நீர்நிலைகள் நீர் திவலைகளை வாரி இறைக்கும் யானை மணிகளை வாரி வீசும்.
சிந்தனை வினா
1. விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும்
என எழுதுக.
- திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின்போது இசைக்கருவிகள் இசைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
- இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.