8th Tamil Unit 2 Book Back Answer - இயல் 2.5 மயங்கொலிகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

8th Tamil Unit 2.5 Book Back Answer 

இயல் 2.5 மயங்கொலிகள்

இயல் 2.5 மயங்கொலிகள்


8th Standard Tamil Unit 2 Book Back Answer Question and answer download pdf. Class 8 Lesson  இயல் 2.5 மயங்கொலிகள் book in answer new syllabus 2025.

Question Types:

  • Class : 8th - Subject: Tamil, Lesson 2:  1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
  • 2 Mark Questions: Answer briefly 
  • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

I. கற்பவை கற்றபின்

1. ல,ள,ழ ஆகிய எழுத்துக்கள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க.
  • ல - நாவின்  மேல் பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கும்.
  • ள -  நாவின் நுனி மேல் அண்ணத்தின் நடுப் பகுதியை தொடுவதால் பிறக்கும்.
  • ழ - நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து  வருடுவதால் பிறக்கும்.   
 
2.  மயங்கொலி எழுத்துகளை உங்கள் நண்பர்களிடம் ஒலித்து காட்டுக.
  • ண,ன,ந
  • ல,ள,ழ
  • ர,ற
 

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  • 1. சிரம் என்பது ___________ (தலை / தளை)
  • 2. இலைக்கு வேறு பெயர் _____________(தளை / தழை)
  • 3. வண்டி இழுப்பது_____________(காலை / காளை)
  • 4. கடலுக்கு வேறு பெயர்________________ (பரவை /பறவை)
  • 5. பறவை வானில்____________ (பறந்தது / பரந்தது)
  • 6.கதவை மெல்லத்______________ (திறந்தான் / திரந்தான்)
  • 7. பூ____________ வீசும். (மனம் / மணம்)
  • 8. புலியின்__________ சிவந்து காணப்படும். (கன் /கண்)
  • 9. குழந்தைகள் _______________விளையாடினர்.(பந்து / பன்து)
  • 10. வீட்டு வாசலில்_____________ இட்டனர். (கோலம் / கோளம்)
விடைகுறிப்பு:
  • 1. தலை
  • 2. தழை
  • 3. காளை
  • 4. பரவை
  • 5. பறந்தது 
  • 6. திறந்தான்
  • 7. மணம்
  • 8. கண்
  • 9. பந்து
  • 10. கோலம்
 
தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
  • எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
 
2. தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர்.
  • தேர்  திருவிழாவிற்குச் சென்றனர். 
 
3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
  • வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.
  

குறுவினா

1. மயங்கொலி எழுத்துகள் யாவை?

  • சில எழுத்துகள் உரே மாதிரி ஒலிக்கும். அவற்றுக்கு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள் மயங்கொலிகள் ஆகும்.
  • உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்துவதாலும் நோய் பெருகியது.
 
2. ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
  • ந - நாவின் நுனி மேல் பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கும்.
  • ன - நாவின் நுனி மேல் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும்.
  • ண - நாவின் நுனி மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும். 
 

மொழியை ஆள்வோம்  

கேட்க 
1. இயற்க்கை எனும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் மகிக.

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் 
அங்கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! 
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! 
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் 
மேல்நின்று தான் சுரத்தலான்.
                                     - இளங்கோவடிகள்  
 
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக      
இயற்கையை பாதுகாப்போம்  

  • (i) வணக்கம்.
  • (ii) உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடு அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
  • (iii) அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
கடிதம்எழுதுக

1. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பருக்கு பாராட்டுக் கடிதம் எழுதுக.

10,பாரதி நகர்,
ஈரோடு,

அன்பு நண்பா!
உயிர் நண்பன் எழுதும் கடிதம் நான் இங்கு நலம் அதுபோல் நீ அங்கு நலமா? இன்று காலை தொலைக்காட்சியில் உன்னுடைய புகைப்படம் பார்த்தேன். நீ விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றுள்ளாய் என்பதை அறிந்தேன். நானும் என் நண்பர்களும் மகிழ்ந்தோம். மேலும் பல பரிசுகளை வாங்க இறைவனிடம் வேண்டுகிறேன். மற்றவை நேரில்.
இப்படிக்கு,
    _________________
உறைமேல் முகவரி
பெறுநர்
சிற்பி,
15,காந்தி வீதி,
சேலம்.
 
மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்ட கட்டகளை நிரப்புக.

உரிய வினைமுற்றுகளைக் கொண்ட கட்டகளை நிரப்புக.

 
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

  • 1. நடக்கிறது: நட
  • 2. போனான்: போ
  • 3. சென்றனர்: செல்
  • 4. பேசினாள்: பேசு
  • 5. வருக :வரு
  • 6. தருகின்றனர்: தரு

நிற்க அதற்குத் தக  

கலைசொற்கள்          
  • 1. நோய் - Diseas 
  • 2. மூளிகைத்தாவரம் - Medicinal Plant
  • 3. நுண்ணுயிர் முறி - Antibiotic

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.