Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 2.4 Book Back Question and Answer - New Syllabus
8th Tamil இயல் 2.4 வெட்டுக்கிளியும் சருகுமானும்
Question Types:
கற்பவை கற்றபின்
1. ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
காட்சி : 1
கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி, சருகுமான் என்னும் கூரன், சிறுத்தை (பித்தக்கண்ணு). மலையின் காட்சி, அருவி விழும் ஓசை, நீரோடையின் சலசல சத்தம்.
வெட்டுக்கிளி : என்ன கூரன் பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாக பதற்றத்துடன் வேகமாக ஓடுகிறாய்?
கூரன் (பெண் சருகுமான்) : காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்போதைக்குஉன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு சிறுத்தை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். பல மணி நேரமாக ஓடிட்டே இருக்கேன். சோர்வாக இருக்கிறது.
வெட்டுக்கிளி : ம்,ம்,ம்…. மஞ்சள் கண்ணுடைய சிறுத்தை தானே… ம்ம்ம்ம் ..
கூரன் : இதோ விழுந்து கிடக்கும் மரத்தின் அடியில் ஒளியலாம்.
வெட்டுக்கிளி : சரியான முடிவு தான்….
கூரன் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே! நான் ஒளிந்து கொள்கிறேன். பித்தக்கண்ணு சிறுத்தை உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லி விடாதே! அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கி விடும்.
வெட்டுக்கிளி : சரி! சரி! ஒளிந்து கொள்.
பித்தக்கண்ணு சிறுத்தை : (உறுமியவாறே…. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நிற்றல் வெட்டுக்கிளியைப் பார்த்தல்)
கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?
(வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் குதித்தல். கூரன் இருக்கும் மரத்தடிப் பக்கம் செல்லுதல்)
(சிறுத்தை முகர்தல்… பூனையின் துர்நாற்றம் மட்டும் அடித்தல். அந்த இடத்தை விட்டு அகலுதல்)
காட்சி 2:
கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி, சருகுமான் என்னும் கூரன்.
சருகுமான் : முட்டாள் வெட்டுக்கிளியே! பித்தக்கண்ணு முன் அப்படிக்
குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திங்காமல் விட்டது அதிசயம் தான்.
வெட்டுக்கிளி : மன்னிச்சுக்கோ! மன்னிச்சுக்கோ!
கூரன் : இனி இப்படிச் செய்தால் திரும்ப வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்.
(தன் கூர்மையான பாதங்களை கூரன் மண்மீது அழுத்துதல்)
(வெட்டுக்கிளி கிளையில் இருந்து கீழே விழப் போதல்)
வெட்டுக்கிளி : கூரனின் கூர்ப்பாதங்கள் பட்டுவிடுமோ?
ஐயோ! ஐயோ!
சரி. சரி… குதித்துக் கொண்டே இருப்போம்.
மதீப்பீடு
1. ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைக் காண்போம்.
வெட்டுக்கிளியும் சருகுமானும்:
ஒரு காட்டில் வெட்டுக்கிளியும் சருகுமானும் வாழ்ந்து வந்தது.சருகு மானின் பெயர் கூரன்.
பித்தக்கண்ணு என்னும் சிறுத்தையும் அந்தக் காட்டில் வசித்து வந்தது. பித்தக்கண்ணு ஒருநாள் கூரனைத் துறத்தியது.
கூரன் ஒழிந்து கொள்வதற்காக குறிஞ்சிப்புதருக்குள் சென்றது.
அங்கிருந்த மரத்தின் மீது வெட்டுக்கிளி ஒன்று இருந்தது.
அதனிடம் என்னை காட்டிக் கொடுத்து விடாதே என்று சொல்லி ஒழிந்து கொண்டது.
வெட்டுக்கிளி பித்தக்கண்ணுவிற்குக் காட்டிக் கொடுத்துவிட்டது.ஆனால், பித்தக்கண்ணுவால் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போனது. கூரன் வெட்டுக்கிளியைக் கண்டித்தது.
முடிவுரை
யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை கதை உணர்த்துகிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.