Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 1.4 Book Back Answers
8th Standard Tamil இயல் 1 சொற்பூங்கா New Text Book
இயல் 1.4 சொற்பூங்கா
கற்பவை கற்றபின்
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
விடைகுறிப்பு:
- தை – தை பிறந்தால் வழி பிறக்கும்.
- மை – மாலா எழுதும்போது தாளில் மை சிந்தியது.
- பா – பா நான்கு வகைப்படும்.
- மா – முக்கனிகளுள் ஒன்று மா.
- கை – மாரிக்கு, விளையாடும் போது கை உடைந்தது.
மதீப்பீடு
தமிழில் ஓர் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக.
முன்னுரை:
- தமிழில் ஓர் ஓரெழுத்து ஒரு மொழி களின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.
ஓரெழுத்து ஒரு மொழி:
- தமிழ் மொழி ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக உள்ளது.
- தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன.
- பூ என்பது ஓர் எழுத்து ஒரு மொழி. அதுவே பிற எழுத்துக்களுடன் இணைந்து பூங்கா என்ற வேறு சொல்லானது.
- மா என்பது ஓர் எழுத்து ஒரு மொழிகளில் ஒன்று. அது மாநிலம்,அரிமா என்று வேறு சொல்லாக மாறுகிறது.
முடிவுரை:
- தமிழில் ஓர் ஓரெழுத்து ஒரு மொழி களின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்துக் கண்டோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.