Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 1.5 Book Back Answers New Syllabus
8th STD Tamil இயல் 1.5 எழுத்துகளின் பிறப்பு Nes Tex Book back answers 2025 - 2026
இயல் 1.5 எழுத்துகளின் பிறப்பு
I. கற்பவை கற்றபின்
1. ‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியலிடுக.
மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.
ஆ) உ, ஊ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்.
இ) தலை
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்.
அ) மார்பு
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.
இ) ட், ண்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து.
ஈ) வ்
பொருத்துக
1. க், ங் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை.
2. ச், ஞ் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி.
3. ட், ண் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி.
4. த்,ந் – ஈ) நாவின் நுனி, அண்ண த்தின் நுனி.
விடைகுறிப்பு:
- 1. க், ங் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி.
- 2. ச், ஞ் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை.
- 3. ட், ண் – ஈ) நாவின் நுனி, அண்ண த்தின் நுனி.
- 4. த்,ந் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி.
சிறுவினா
1.எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன?
- உடலிலிருந்து எழும் காற்று மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய ஒன்றில் பொருந்தி ஒலி உறுப்புகளின் முயற்சியால் ஒலிகள் தோன்றுகின்றன. இதனை எழுத்துக்களின் பிறப்பு என்பர்.
2.மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
- 1.வல்லினம் - மார்பு
- 2.மெல்லினம் - மூக்கு
- 3.இடையினம் - கழுத்து
3.ழகர,லகர,ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
- ழகர - நாக்கின் நுனி மேல் வாயை வருடுவதால்
- ளகர - பல்லின் நுனியை நாக்கின் ஓரங்கள் வருடுவதால்
- லகர - மேல் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் நெருங்குவதால்
மொழியை ஆள்வோம்
கேட்க
தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறலே.
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
– நாமக்கல் கவிஞர்
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
தொல்காப்பியம் என்னும் தொன்மைத் தமிழ்நூலில் கூறப்படும் எழுத்துகள் வட்டெழுத்துகளைக் குறிப்பனவே ஆகும். இவ்வெழுத்தினைக் கோலெழுத்து, கண்ணெழுத்து எனப் பண்டைத் தமிழ் நூல்கள் குறிப்பிட்டுள்ளன. நாம் இன்று எழுதும் எழுத்துகள் ஆப்பு வடிவ எழுத்துகளிலிருந்தே தோன்றின என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். கோடுகள் மிகுதியாக இருக்கக் காரணம் இதுவே என்பர்.
எகர ஒகர எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். மெய்யா? உயிர்மெய்யா? குறிலா? நெடிலா?
என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். இந்நிலையில் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். அதன் பிறகு தந்தை பெரியாரின் சீர்திருத்தமும் பெற்று தமிழ் இன்று எழுதும் தமிழாக மாறியது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது. நன்றி!
அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
அகர வரிசைப்படுத்தியன:
அழகுணர்ச்சி, ஆரம் நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்
கட்டுரை எழுதுக
எனது தாய் மொழி.
IV மொழியோடு விளையாடு
பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.
ஒருசொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.
எ.கா: அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.
படி, திங்கள், ஆறு.
படி : படித்துக்கொண்டிருந்த மாலதி, மாடு கறந்த ஒரு படிப்பாலை எடுத்துக் கொண்டு, படியில் ஏறிச் சென்று தாயிடம் கொடுத்தாள்.
திங்கள் : சித்திரைத் திங்களில், முதல் திங்கள் அன்று, இரவில் திங்களைப் பார்ப்பது நல்லது.
ஆறு : ஆறுமுகம், காலையில் துவைப்பதற்காக ஆறு துணிகளை எடுத்துக்கொண்டு காவேரி ஆற்றுக்குச் சென்றான்.
கீழ்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக்க.
மா தேன் மலர் செம்மமை சிட்டு கனி
குருவி இலை காய் கூடு முட்டை மரம்
(எ.கா) சிட்டுக்குருவி
விடைகுறிப்பு:
- மாங்காய்
- மாமரம்
- தேன்கூடு
சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
- 1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
- 2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
- 3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
- 4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
- 5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
- விடைகுறிப்பு:
ஒழுங்குபடுத்திய தொடர் :
- 1. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.
- 2. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
- 3. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
- 4. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
- 5. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.
நிற்க அதற்குத் தக.
கலைச்சொல் அறிவோம்
- 1. ஒலிபிறப்பியல் – Articulatory phonetics
- 2. மெய்யொலி – Consonant
- 3. மூக்கொலி – Nasal consonant sound
- 4. கல்வெட்டு – Epigraph
- 5. உயிரொலி – Vowel
- 6. அகராதியியல் – Lexicography
- 7. சிலேடை - Pun
- 8. சித்திர எழுத்து – Pictograph
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.