10th History July Month Assignment Answer key

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Social Science | History 

July Month Assignment 2

Question and Answer key 

10th July Month Assignment Answer Key
10th July Month Assignment Answer Key


10th History July Month Assignment Answer key , அலகு -2 - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம், 10th Standard July Month Assignment 2 Question Paper and Answer key Download PDF. TN 10th All Subject July Month Assignment 2 Answers, 10th Tamil, English, Maths, Science, Social Science July Month Assignment Answer key Tamil Medium, English Medium Download PDF. TN SCERT,  ASSIGNMENT 1 QUESTION & ANSWER KEY TN SCERT


10th Social Science

     ஜூலை மாத  ஒப்படைப்பு - 2 

    • வகுப்பு - 10
    • சமூக அறிவியல் (வரலாறு)
    • அலகு -2 - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

     பகுதி-அ

    1.ஒரு மதிப்பெண்வினா

    1. அமெரிக்காவில் முதல் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி எந்த ஆண்டு தோன்றியது?
    அ)பொ.ஆ.1919      
    ஆ)பொ.ஆ. 1929 
    இ)பொ.ஆ. 1939     
    ஈ) பொ.ஆ. 1949
    விடை : ஆ ) பொ.ஆ.1929

    2. இத்தாலியில் பாசிசக் கட்சிதோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
    அ)பொ.ஆ. 1919          
    ஆ)பொ.ஆ. 1929
     இ)பொ.ஆ.1909           
    ஈ) பொ.ஆ. 1949
    விடை : அ ) பொ.ஆ.1919

    3. அடால்ஃப்ஹிட்லர் எழுதிய சுயசரிதை நூலின் பெயர் என்ன?
    அ)போரும் அமைதியும் 
    ஆ)வெள்ளை பயங்கரவாதம்
    இ)மெயின் காம்ப்
    ஈ)புரட்சிகர இளைஞர் இயக்கம்.
    விடை : இ ) மெயின் காம்ப் 

    4. சரியானகூற்றைத்  தேர்ந்தெடு.
    i. அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
    ii. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல்விலக்கிக்கொள்ளப்பட்டது.
    iii. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடிய நெல்சன்
    மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.
    அ)i) மற்றும் ii) சரி         
    ஆ) ii) மற்றும் iii) சரி
    இ)i) ii)மற்றும் iii) சரி      
    ஈ) i) மற்றும்iii) சரி
    விடை : ஈ )  i) மற்றும்iii) சரி

    5. உலகத்தின் எந்தப்பகுதிடாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
    அ)ஐரோப்பா 
    ஆ) இலத்தீன் அமெரிக்கா 
    இ) இந்தியா         
    ஈ) சீனா
    விடை : ஆ ) இலத்தீன் அமெரிக்கா
                                   

    பகுதி-ஆ

    II. குறுவினா

    6. போயர்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக

            தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவழியினரே ஆப்பிரிக்க நேர்கள் என்று அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.

    7. மன்றோ கோட்பாடு பற்றி எழுதுக.

             அமெரிக்க குடியரசுத் தலைவர் மன்றோ , அமெரிக்காவில் எந்தப் பகுதியிலும்  அது வடக்கோ , தெற்கோஐரோப்பியர்கள் தலையீட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிரான போராகக் கருதப்படும்என அறிவித்தார். இதுவே மன்றோ கோட்பாடு ஆகும்.

    8. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதம்" குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

      * வியட்நாம் விடுதலை வீரர்கள் பிரெஞ்சு கவர்னரை கொலை செய்ய முயற்சித்தனர்.
    *  விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் புரட்சி செய்தனர்.
    * பிரெஞ்சு அரசு புரட்சியை அடக்கியது. ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக்கொன்றது.
                                      

    பகுதி-இ

    III. சிறுவினா


    1 , 'தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் பற்றி எழுதுக.

    தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல்:
                     இனஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல் என்பதாகும். ஒட்டுமொத்த நாடும் பல்வேறு இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம் வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

    2. ஹோசி.மின்பற்றிஒருகட்டுரைஎழுதுக.

             ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21 ஆவது வயதில் அவர் அவர் ஐரோப்பா சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக "விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்" எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் 'புரட்சிகர இளைஞர் இயக்கம்' எனும் அமைப்பை நிறுவினார்.

    3. தென்ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சிகுறித்து விவரிக்கவும்.

    தென் ஆப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன.
    அவை யூனியனிஸ்ட் கட்சி (ஆங்கிலேயர்கள்)
    தென் ஆப்பிரிக்கக் கட்சி (ஆப்பிரிக்க நேர்கள் / போயர்கள்) ஆகியவை.
    முதல் பிரதம மந்திரியானபோதா, தென் ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர். ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
    ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக்கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
    1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக்கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது.
    தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
    ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி இத்தருவாயில் தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டிலிருந்த
    தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.

    பகுதி - ஈ 

    IV ) பெருவினா 

    4. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
    முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரியாவின் படையில் பணியாற்றனார். ஆனால் முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது.
    1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட்டு ஜெர்மன் உழைப்பாளர் கட்சி என்ற நாசிக் கட்சியை உருவாக்கியது. அவர்களுள் ஹிட்லரும் ஒருவராக இருந்தார்.
    அவர் 1923ஆம் ஆண்டு பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சியை மேற்கொண்டார்.
    அம் முயற்சியில் தோல்வியுற்றார். எனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
    சிறையிலிருந்த போது அவரது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான ' எனது போராட்டம்' என்ற நூலை எழுதினார்.
    1932ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
    இதனால் முதலாளிகள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரிக்கத் தொடங்கினர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
    ஹிட்லரின் நாசிச அரசு:
    கம்யூனிஸ்டுகள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைக்க மறுத்ததால் ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்தது.
    இதன் விளைவாகத் தொழிலதிபர்களும் வங்கியாளர்களும் குடியரசுக் கட்சியினரும் ஹிட்லரை சான்சிலராக பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹிண்டன்பர்க் என்பவரை
    வற்புறுத்தினர்.
    மூன்றாவது ரெய்க் என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
    1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஹிண்டன்பர்க் மறைந்ததும், சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும், ராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.