10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி இயல் 6, 7

10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி 
இயல் 6

கம்பராமாயணம் 

பாலகாண்டம் - நாட்டுப்படலம்

தண்டலை மயில்கள் தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவினேங்க குவளை கண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பி மகரயாழின் 
வண்டுகளின் பாட மருதம் வீற்றி ருக்கும்தோ

அயோத்தியா காண்டம் - கங்கைப் படலம்

வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.


                                                                                                             -கம்பர்

*********************************
இயல் 7

சிலப்பதிகாரம்


தூசும் துகிரும் அகிலும் 
மாசறு முத்தும் மணியும் பொன்னும் 
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
 கூலம் குவித்த கூல வீதியும் ;

                                                  -இளங்கோவடிகள்********************************
திருக்குறள்

அமைச்சு
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் 
தியற்கை அறிந்து செயல்

பொருள் செயல் வகை 
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் 
றுண்டாகச் செய்வான் வினை.

குடிசெயல் வகை 
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 
சுற்றமாச் சுற்றும் உலகு.


நல்குரவு
 இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது.
                                                    - திருவள்ளுவர்

*********************************
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments