10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி இயல் 4,5

10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி
 இயல் 4


********************************
பெருமாள் திருமொழி 
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் 
மானாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ 
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
                                                   - குலசேகராழ்வார்

பாடலின் பொருள்

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணை கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.  வித்துவக்கோட்டில்  எழுந்தருளியிருக்கும் அன்னையே!அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன அடியவ்னொகிய நொன உன அருகளமய எபமபொழுதும் எதிர்பொர்த்து வொழ்கினமறன. 

*********************************
இயல் 5

நீதி வெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை 
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
                                              - கா.ப.செய்குதம்பிப் பாவலர்

பாடலின் பொருள் 
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.


திருவிளையாடற்புராணம்

 மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல் 

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் 
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
 தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
                                                                          - பரஞ்சோதி முனிவர்

பாடலின் பொருள் 

பாண்டியன், "புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச்

செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று பணிந்து வணங்கினான்.

நுண்ணிய கேள்வியறிவுடைய புலவர்களும், "மன்னா, நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது"********************************


*********************************
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments