8th Tamil Uniu 5 Book Back Answers - இயல் 5.5 வினையால் அமையும் தொடர்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Uniu 5 Book Back Answers - இயல் 5.5 வினையால் அமையும் தொடர்கள்

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.எழுவாய். ஒரு வினையைச் செய்தால் அது ___________.

  • அ)செய்வினை


2.கரையில் சேர்ப்பான் என்பது __________.

  • ஈ)பிறவினை


3.பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது என்பது ____________.

  • ஆ)செயப்பாட்டு வினை

 

பொருத்துக

1. ஆடினாள் - செய்வினை

2. திருத்தினான் - தன்வினை   

3. புத்தகம் படிக்கிறேன் - செயப்பாட்டு  வினை

4. கட்டுரை அகிலனால் எழுதப்பட்டது - பிறவினை  

விடைகுறிப்பு:

1. ஆடினாள் - தன்வினை

2.  திருத்தினான் - பிறவினை

3. புத்தகம் படிக்கிறேன் - செய்வினை

4. கட்டுரை அகிலனால் எழுதப்பட்டது - செயப்பாட்டு  வினை 

   

பின்வருவனவற்றுள் செய்வினைத் தொடர்களைச் செயப்பாட்டுவினைத் தொடர்களாகவும், செயப்பாட்டுவினைத் தொடர்களைச் செய்வினைத் தொடர்களாகவும் மாற்றுக.

1. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்

2. பழம் அணிலால் கொறிக்கப்பட்டது.

3. ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.

4. ஓவியம் குமரனால் வரையப்பட்டது.

விடைகுறிப்பு:

  • 1. வகுப்பு  மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது.
  • 2. அணில் பழத்தைக் கொறித்தது.
  • 3. இலக்கணம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டது.
  • 4. குமரன் ஓவியம் வரைந்தான்.    

 

சிறுவினா

1.தன்வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • எழுவாய்,ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்.
  • எ.கா.செல்வி கடலைக் கண்டாள்.


2. 'ஏற்றினான்' என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக.

  • "ஏற்றினான்" என்பது தானே வினையைச் செய்ததால்,இது தன்வினை ஆகும்.


3.செய்வினை, செயப்பாட்டு வினையாக மாறும் போது நிகழும் மாற்றங்கள் யாவை?

  • செயப்படுபொருள்,எழுவாய், பயனிலை என்னும் வரிசையில் அமையும். எழுவாயோடு ஆல் வேற்றுமை உருபு இணைந்து வரும்.பயனிலையோடு படு,பட்டது போன்ற துணைவினையோடு சேர்ந்து வரும்.

 

மொழியை ஆள்வோம்!

கேட்க

1. நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.

ஒரு சாண் வயித்துக்கு

பல இரவு கண்விழிச்சு

ராட்டை நெஞ்சேன்

ராட்டை நெஞ்சேன்

என் பிள்ளைக்குப் பால்வாங்கி

கட்டுத் தறி நெஞ்சேன்

கட்டுத் தறி நெஞ்சேன்

இரவு பகலா தறி நெஞ்சு

வறுமை ஒன்றும் போகலையே?

கட்டுத் தறியாட்டம் மனசு ஆடுதம்மா!


கீழ்காணும்தலைப்புகளில் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

1. உழவும் நெசவும்

என் உயிர் கொடுத்து இன்னுயிர் பேசவைத்த இறைவனுக்கும் என் தமிழ் தாய்க்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவும் நெசவும் எனும் நல்லதொரு தலைப்பில் சில மணித்துளிகள் உங்களுடன் பேசுகின்றேன்.

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே ‘ என்கிறது புறநானூறு. அதாவது ஒரு மனிதனுக்கு உணவும் உடையும் அவசியம் தேவை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறது. அந்தப் புறநானூற்று வரிகள் உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் இல்லை என்றால் என்ன ஆகும்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

உணவு இல்லாமல் வறுமையில் வாடி மண்ணின் வாய்க்கு உணவாக நாம் போய் இருப்போம். ஆடை இல்லாமல் போனால் மானம் அழிந்து மண்ணுக்கு இறையாய் இருப்போம். எனவே உழவும் நெசவும் இரு கண்களாக நாம் நினைக்க வேண்டும்.

உணவுத்தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவத்தினை நாம் கொடுக்க வேண்டும்.


எதிர்கால பாரதத்தை உருவாக்கக்கூடிய இளைஞர்களாகிய நாம் உழவுத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் கற்று அவை மேன்மையடைய நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்.

 

சரியான மரபு சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. கோழி  - கொக்கரிக்கும்
  • 2. பால்     - பருகு
  • 3. சோறு - உண்
  • 4. பூ          - கொய்
  • 5. ஆ        - நிரை       

 

மரபு பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக்கயல்கண் விழித்தாள். பூப்பறிக்க  நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன் தோரணம் கட்ட மாவிலையையும் கொய்துக்கொண்டு வீடு திரும்பினாள் அம்மா தந்த பாலைப் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள். 

  • சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல்கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன் தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள் அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

 

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடுபொருத்துக.

1. ஆயிரங்காலத்துப் பயிர் – அ) இயலாத செயல்

2. கல்லில் நார் உரித்தல் – ஆ) ஆராய்ந்து பாராமல்

3. கம்பி நீட்டுதல் – இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது

4. கானல்நீர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது

5. கண்ணை மூடிக்கொண்டு – உ) விரைந்து வெளியேறுதல்

விடைகுறிப்பு:

  • 1. ஆயிரங்காலத்துப் பயிர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது
  • 2. கல்லில் நார் உரித்தல் – அ) இயலாத செயல்
  • 3. கம்பி நீட்டுதல் – உ) விரைந்து வெளியேறுதல்
  • 4. கானல்நீர் –  இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது
  • 5. கண்ணை மூடிக்கொண்டு - ஆ) ஆராய்ந்து பாராமல்

 

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. வாழையடி வாழையாக

  • முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.


2. முதலைக்கண்ணீர்

  • காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தான்.


3. எடுப்பார் கைப்பிள்ளை

  • ரகு சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படுகிறான்.


கட்டுரை எழுதுக.

உழவே உயர்வு 

 

உழவு:

உழவுத் தொழிலுக்குப் பின் தான் உலகம் உள்ளது என்கிறது திருக்குறள். உழவுத் தொழிலால் தான் மனித உயிர்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

உழவே உயர்வு:

உலகில் உள்ள எல்லாத் தொழில்களிலும் முதன்மையானது உழவுத்தொழில் மட்டும் தான்.

உழவு இல்லை என்றால் உலகம் இயங்காது.

அதனால் தான் அதனை நாட்டின் முதுகெலும்பாகச் சொல்கிறார்கள்.

சிறப்பு:

அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் உழவை எதிர் பார்த்து வாழ்கிறார்கள்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார்.

முடிவுரை:

அனைவரும் உழவு செய்து மனித உயிர்களைக் காக்க வேண்டும்.

 

மொழியோடு விளையாடு

ஊர்களையும்அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!


நிற்க அதற்குத்தக

  • நூல் - Thread
  • தையல் - Stitch
  • தறி - Loom
  • ஆலை - Factory
  • பால்பண்ணை - Dairy farm
  • சாயம் ஏற்றுதல் - Dyeing
  • தோல் பதனிடுதல் - Tanning
  • ஆயத்த ஆடை - Readymade dress

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.