Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 3.3 Book Back Answer
8th Standard Tamil இயல் 3.3 பல்துறைக்கல்வி New Book 2025 Question and answers
இயல் 3.3 பல்துறைக்கல்வி
கற்பவை கற்றபின்
1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
பத்துப்பாட்டு
- 1. மதுரைக்காஞ்சி
- 2. நெடுநல்வாடை
- 3. குறிஞ்சிப்பாட்டு
- 4. பட்டினப்பாலை
- 5. மலைபடுகடாம்
எட்டுத்தொகை:
- 1. நற்றிணை
- 2. குறுந்தொகை
- 3. ஐங்குறுநூறு
- 4. பதிற்றுப்பத்து
- 5. பரிபாடல்
- 6. கலித்தொகை
- 7. அகநானூறு
- 8. புறநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு:
- 1. நாலடியார்
- 2. நான்மணிக்கடிகை
- 3. இன்னாநாற்பது
- 4. இனியவை நாற்பது
- 5. கார் நாற்பது
- 6. களவழி நாற்பது
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது_________.
- ஆ) கல்வி
2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் _________.
- அ) இளமை
3. இன்றைய கல்வி நுழைவதற்குக் _________கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
- ஈ) தொழிலில்
நிரப்புக
1. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ………………… என்னும் அறிவுக்கலை.
2. புற உலக ஆராய்ச்சிக்கு ………………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது ………………………. இன்பம் ஆகும்.
விடைகுறிப்பு:
- 2. அறிவியல்
- 3. காவிய
பொருத்துக
1. இயற்கை ஓவியம் – அ) சிந்தாமணி
2. இயற்கை தவம் – ஆ) பெரிய புராணம்
3. இயற்கைப் பரிணாமம் – இ) பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – ஈ) கம்பராமாயணம்
விடைகுறிப்பு:
- 1. இயற்கை ஓவியம் – இ) பத்துப்பாட்டு
- 2. இயற்கை தவம் – அ) சிந்தாமணி
- 3. இயற்கைப் பரிணாமம் – ஈ) கம்பராமாயணம்
- 4. இயற்கை அன்பு – ஆ) பெரிய புராணம்
குறுவினா
1.இன்றைய கல்வியின் நிலை பற்றி திருவிக கூறுவன யாவை?
- இக்காலத்தில் கல்வி பொருள் இல்லாமல் கிடைக்கிறது.
- மனப்பாடம் செய்து பட்டம் பெறுவது, அதன்மூலம் வேலைக்குச் செல்வது.
2.தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
- தாய்மொழி கொண்டு பிறக்கிறது.
3.திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிட்டுள்ளவர்களின் பெயர்களை எழுதுக.
- இளங்கோ,
- திருத்தக்கதேவர்,
- ஆண்டாள் சேக்கிழார்,
- கம்பர்.
சிறுவினா
1. தமிழ் வழி கல்வி பற்றி திரு. வி.க கூறுவனவற்றை எழுதுக.
- அறிவு கலையைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.
- கலைகளை அனைத்தையும் தாய்மொழியில் கொண்டுவர வேண்டும்.
2. அறிவியல் கல்வி பற்றி திரு .வி .க கூறுவன யாவை?
- அறிவியல் முக்கியமானது. உலகத்தோடு தொடர்பு கொள்ள அறிவியல் தேவை எனவே அதை இளைஞர்கள் கற்க வேண்டும்.
நெடு வினா
1. காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
- இன்பத்துறையில் காவிய இன்பம் ஒன்று.
- தமிழில் இலக்கியங்கள் பல உள்ளன.
- பத்துப்பாட்டு, கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவை.
- இவைத் தமிழ்க்கருவூலங்கள்.
- இளைஞர்களே!காவியம் படியுங்கள்.
- இன்பம் பெறுங்கள்.
சிந்தனை வினா
1. திரு. வி. க குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
- திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்க விரும்புகிறேன்.
- காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.