12th Tamil Refresher Course Test 2

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Tamil Refresher Course Test 2

12th Tamil Refresher Course Test 2. 12th Standard Tamil Refresher Course One Word Test 2. TN 12th Tamil Refresher Course Online Test 2, One Word Test 1. 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒரு மதிப்பெண் தேர்வு - 2 வினா & விடை. 12TH TAMIL PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM ONE WORD TEST - 2. மேல்நிலை இரண்டாம் ஆண்டு. 
12th Tamil Refresher Course online Test 2


  • Class: 12
  • Subject: Tamil - பொதுத்தமிழ்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • இயங்கலைத்தேர்வு - 2 - ஒரு மதிப்பெண்

1. செய்யுளின் அழகையும் , நயத்தையும் எடுத்து மொழிவது ------- இலக்கணம்.

அ) எழுத்து
ஆ) சொல்
இ ) அணி
ஈ) பொருள்
விடை : இ ) அணி

2) அணி இலக்கணத்தைச் சிறப்பாகக் கூறும் நூல்

அ) தண்டியலங்காரம்
ஆ) தொல்காப்பியம்
இ ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
விடை : அ) தண்டியலங்காரம்

3) உவமானம் ஒரு தொடராகவும் , உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைய , இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது அணி.

அ) உருவக அணி
ஆ) உவமையணி
இ) வேற்றுமையணி
ஈ) எதுவுமில்லை
விடை :  ஆ) உவமையணி

4) " இரவென்னும் ஏமாப்பில் தோணி

கரவென்னும் பார்த்தாக்கப் பக்கு விடும் " - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ---

அ) உவமை அணி
ஆ) வேற்றுமை அணி
இ ) உருவக அணி
ஈ ) எதுவுமில்லை
விடை : இ ) உருவக அணி

5) இரு பொருள்களின் ஒற்றுமையை முதலில் கூறி , பின் அப்பொருள்களுக் கிடையே வேற்றுமை தோன்றக் கூறுவது அணி

அ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) உவமை அணி
விடை : இ) வேற்றுமை அணி

6) பாடலில் கவிஞர் கூறும் கருத்தே (பொருள்) -------

அ) மையக்கருத்து
ஆ) திரண்ட கருத்து
இ) மோனை
ஈ) சந்த நயம்
விடை : அ) மையக்கருத்து

7) செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது ----- தொடை

அ) மோனை
ஆ) எதுகை
இ) இயைபு
ஈ) முரண்
விடை : அ) மோனை

8) செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து ( மாத்திரை அளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

அ) மோனை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) எதுகை
விடை : ஈ) எதுகை

9) வஞ்சிப்பாவின் ஓசை -----

அ) செப்பலோசை
ஆ) தூங்கலோசை
இ) அகவலோசை
ஈ) துள்ளலோசை
விடை : ஆ) தூங்கலோசை

10 ) ' தன்மை அணி' எனப்படுவது ----- அணி

அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) இயல்பு நவிற்சி அணி
ஈ) வேற்றுமை அணி
விடை : இ) இயல்பு நவிற்சி அணி

11) Conjunction word என்ற ஆங்கிலச்சொல் தமிழில் ---- எனப் பொருள்படும்

அ) சந்தி
ஆ) சாரியை
இ) விகாரம்
ஈ) இடைநிலை
விடை : அ) சந்தி

12) நல்ல + கதை - சேர்த்து எழுதுக.

அ) நல்ல கதை
ஆ) நன்கதை
இ) நல்லக்கதை
ஈ) நன்மைக்கதை
விடை : அ) நல்ல கதை

13) ' அணல் என்பதன் பொருள் -----

அ) நெருப்பு
ஆ) தாடி , கழுத்து
இ ) உணவு
ஈ) காடு
விடை : ஆ) தாடி , கழுத்து

14) 'ண' என்ற எழுத்தை ----- என்பர்.

அ) தந்நகரம்
ஆ) டண்ணகரம்
இ) றன்னகரம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ) டண்ணகரம்

15 ) மேல்நோக்கிய லகரம் என்றழைக்கப்படுவது -----

அ)ழ
ஆ)ல
இ) ள
ஈ) ழ
விடை : ஆ)ல

16) அவனும் அவளும் வந்தது - இதில் உள்ள வழு

அ) எண்
ஆ) திணை
இ )  பால்
ஈ) இடம்
விடை : ஆ) திணை

17) ' மூணு' என்பன் திருந்திய வடிவம்

அ) மூன்று
ஆ) 3
இ) மூனு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : அ) மூன்று

18) 'கான்' என்பதன் பொருள் ------

அ) காடு
ஆ) பார்வை
இ ) காண்
ஈ) நோக்கு
விடை : அ) காடு

19) ' ஏராளம்' என்பது

அ) குறைவு
ஆ) மிகுதி
இ) வரி
ஈ) வரம்பு
விடை : ஆ) மிகுதி

20) visa என்பதன் தமிழாக்கம்

அ) நுழைவு இசைவு
ஆ) கடவுச்சீட்டு
இ) உற்பத்தி
ஈ) மதிப்பு
விடை : அ) நுழைவு இசைவு

***************************


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.