12th Tamil Refresher Course Test 3

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Tamil Refresher Course Test 3

12th Tamil Refresher Course Test 3. 12th Standard Tamil Refresher Course One Word Test 3. TN 12th Tamil Refresher Course Online Test 3, One Word Test 1. 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒரு மதிப்பெண் தேர்வு - 3 வினா & விடை. 12TH TAMIL PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM ONE WORD TEST - 3. மேல்நிலை இரண்டாம் ஆண்டு. 
12th Tamil Refresher Course online Test 3


  • Class: 12
  • Subject: Tamil - பொதுத்தமிழ்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • இயங்கலைத்தேர்வு - 3 - ஒரு மதிப்பெண்

1. இடது பக்கம்' - என்பதன் திருந்திய வடிவம் -----

அ) இடப்பக்கம்
ஆ) இடது புறம்
இ) வலப்புற மாற்று
ஈ) இடக்கைப் புறம்
விடை : அ) இடப்பக்கம்

2) ஆந்தை -----

அ) கூவும்
ஆ) கீச்சிடும்
இ) அலறும்
ஈ) கரையும்
விடை : இ) அலறும்

3) புலியின் இளமைப் பெயர் ------

அ) குருளை
ஆ) பறழ்
இ) கன்று
ஈ) குட்டி
விடை : ஆ) பறழ்

4) குதிரை ஒலி மரபு -----

அ) கத்தும்
ஆ) ஊளையிடும்
இ) குரைக்கும்
ஈ) கனைக்கும்
விடை : ஈ) கனைக்கும்

5) ஆட்டின் இருப்பிடம் ------

அ) பட்டி
ஆ) தொட்டில்
இ ) கூடம்
 ஈ) தொழுவம்
விடை : அ) பட்டி

6) பனை  ------

அ) ஓலை
ஆ) இலை
இ) தாள்
ஈ) தட்டு
விடை : அ) ஓலை

7) ஏர் ------

அ) உழுதல்
ஆ) ஓட்டல்
இ) செலுத்துதல்
ஈ) எதுவுமில்லை
விடை : அ) உழுதல்

8) நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பைக் கூறி , தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது ----- அணி

அ) வேற்றுமை
ஆ) உருவக
இ) உவமை
 ஈ)சொற்பொருள் உவமை
விடை : இ) உவமை

9 ) உவமைத் தொடரில் அமையக் கூடிய உவமைகளை -----வகைப்படுக்கலாம்.

அ) 5
ஆ) 4
இ) 7
ஈ) 3
விடை : ஈ) 3

10) சூரியனைக் கண்ட பனி போல - இதில் பயின்று வந்துள்ள உவமை

அ) பண்பு உவமை
ஆ) தொழில் உவமை
இ )  பயன் உவமை
ஈ) மேற்காண் அனைத்தும்
விடை : இ )  பயன் உவமை

11) இலை மறை காய் போல என்பதன் உள்ளடக்கம் -----

அ) அரிதாக
ஆ) ஒட்டி உறவாடுதல்
இ) காத்திருத்தல்
ஈ) மறை பொருள்
விடை : ஈ) மறை பொருள்

12) ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை -----

அ) தொழில்
ஆ) பயன்
இ )  பண்பு
ஈ) எதுவுமில்லை
விடை : அ) தொழில்

13) வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது -----

அ) எழுத்து மொழி
ஆ) தொடர்மொழி
இ)பேச்சு மொழி
ஈ) உடல்மொழி
விடை : இ)பேச்சு மொழி

14) மனிதர்களின் சிந்தனை காலம் கடந்து நிற்பதற்கு ----- மொழியே காரணம் ஆகும்.

அ) எழுத்து மொழி
ஆ) தொடர்மொழி
இ) பேச்சு மொழி
ஈ) உடல்மொழி
விடை : அ) எழுத்து மொழி

15 ) பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது -----

அ) கலைச்சொல்லாக்கம்
ஆ) மொழியாக்கம்
இ ) அகராதி
ஈ) விபரக்குறிப்பு
விடை :  இ ) அகராதி

16) ' தன் கையே தனக்குதவி' - என்பதன் விளக்கம் -----

அ) தன்னலம்
ஆ) பிறர்நலம்
இ) தன்னம்பிக்கை
ஈ) அவதூறு
விடை : இ) தன்னம்பிக்கை

17) Backup - என்பதன் கலைச்சொல் -----

அ) உலாவி
ஆ) சொடுக்கி
இ )காப்பு நகல்
 ஈ) கோப்பு
விடை : இ )காப்பு நகல்

18) ' மின்னஞ்சல்' எனப்படுவது ---

 அ) Email
ஆ ) Windows 10
இ ) Blog
ஈ ) Website
விடை :  அ) Email

19 ) TYPHOD என்பது -----

அ) குடல்புண
ஆ) குடற்காய்ச்சல்
இ) குடல்புழு
ஈ) குருதி
விடை :  ஆ) குடற்காய்ச்சல்

20) பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையான இடத்தில் புதிதாகச் சொற்களை உருவாக்குவதும் ---- ஆகும்.

அ) அகராதி
ஆ) விபரக்குறிப்பு
இ) கலைச்சொல்லாக்கம்
ஈ) தன்விபரம்
விடை : இ) கலைச்சொல்லாக்கம்

***************************


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.