12th Commerce Refresher Course Answer Key Tamil Medium Topic 11. மின்னணு வங்கியியல் பணிகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 11. மின்னணு வங்கியியல் பணிகள் 


12th Commerce Refresher Course  Answer Key Topic 11. மின்னணு வங்கியியல் பணிகள் 
. 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 11. மின்னணு வங்கியியல் பணிகள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 11

மதிப்பீட்டு வினா விடைகள் :

1.மின்னணு வங்கியியல் என்றால் என்ன ?

  • தற்போது அனைத்து வங்கிகளும், வங்கி பரிவர்த்தனைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வசதியான வங்கிச் சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
  • வரைவோலைகள், காசோலைகள் மற்றும் காகித அடிப்படையிலான நிதிப் பரிமாற்றங்களுக்கு இந்தச் சேவை ஒரு மாற்று ஆகும்.

2. குறிப்பு வரைக. கைப்பேசி வங்கியியல்

  • பெரும்பாலான வணிக வங்கிகள் சுட்டிகை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கணினி நிரல்களை அதாவது செயலிகள் (App) என்று அழைக்கப்படு நிரல்களை வடிவமைத்துள்ளன.
  • சுட்டிகை - கைபேசிகளில் இருக்கும் இந்தப் பயன்பாட்டைக் கொண்டு ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கை எங்கிருந்தும் இயக்க முடியும்.
  • இந்தச் சேவையினைக் கைபேசி வங்கியியல் என்று அழைக்கப்படுகிறது

3. பற்று அட்டையின் தேவை யாது ?

  • தானியங்கி பணம் வழங்கும் அட்டையே (ATM Card) பற்று அட்டை (Debit Card) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பொருள்களை வாங்கவோ அல்லது சேவைகளைப் பெறவோ அதிக அளவில் இந்த அட்டை பயன்படுகிறது.

4. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் - விளக்குக.

  • இது 2005இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது.
  • இந்த மின்னணு நிதி பரிமாற்றத்தின் கீழ் மொத்த நிதி பரிமாற்ற நடவடிக்கைகள் தொகுப்புகளாக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் இந்தியா முழுவதும் தீர்க்கப்படுகின்றன.
  • NEFT செயல்படுத்தப்பட்ட கிளை வங்கிகளில் கணக்குகளைப் பராமரிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் NEFT முறையைப் பயன்படுத்தத் தகுதியுடையவையாகும்.
  • பரிவர்த்தனைகள் உண்மையான நேர அடிப்படையில் நடைபெறுவது இல்லை.
  • ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், காலை 8.00 மணியிலிருந்து இரவு 7.30 மணி முடிய 23 தீர்வுகள் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுகின்றன.
  • NEFT பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுகின்றன.

5.மின்னணு வணிகத்தின் பணிகளை விவரி ?

  • தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்
  • உண்மை நேர மொத்த தீர்வு அமைப்புகள்
  • மின்னணு தீர்வு சேவைகள்
  • இணைய வங்கியியல்
  • கைப்பேசி வங்கியியல்
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.