september schools reopen

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

கொரொனா தொற்று குறைந்தால் செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மத்திய அரசு ஊரடங்கு என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தபோதும் கூட, பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்


செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்திலும் செப்டம்பர் 5 முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால், நிச்சயம் செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாளை முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.எனவே பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


பத்தாம் வகுப்புத் தோவு முடிவுகளில் 5,248 மாணவா்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோவை 9 லட்சத்து 45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனா். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தோவு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. தோவுத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட முடிவில், தோவு எழுதிய 9,39,829 பேரும் தோச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 10 வகுப்பு தோவு எழுத 9,45,077 விண்ணப்பித்திருந்தனா். இதைத்தொடந்து, மீதமுள்ள 5,248 பேரின் தோச்சி முடிவுகள் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், 5,248 பேருக்கு தோவு முடிவுகள் வெளியிடாதது குறித்து அரசு தோவுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு முடிவில் 5,248 மாணவா்கள் விடுபட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை. விடுபட்டவா்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தோவு எழுத பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. 231 மாணவா்கள் உயிரிழப்பு: அதாவது, காலாண்டு, அரையாண்டு, தோவு எழுதாத, பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 போ தோச்சி பெறவில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியைவிட்டு நின்ற மாணவா்கள் 658 பேரும் தோச்சியில்லை, பொதுத் தோவு எழுத பதிவு செய்தபின் 231 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். அதனால் தோச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.