தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள்

திறப்பது எப்போது?தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
தமது நிலைப்பாட்டை கூறியது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று
அறிகுறியும் இல்லை. ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும்
11ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக
நடைபெற்றது என்றாலும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை
என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய
கல்வி அமைச்சக செயலாளர் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் பள்ளிகள்
திறக்க வாய்ப்பில்லை என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட
10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவில்,
தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றவர்களாக
அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து கோவையைச்
சேர்ந்த வருண்குமார் என்பவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவில், தனித் தேர்வர்களும் தேர்வில் வெற்றி பெற்றதாக
அறிவிக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரி
ஆகியவற்றில் சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருவதால் தனித் தேர்வர்கள்
அதில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தனித் தேர்வர்களிடம்
பாரபட்சம் காட்டப்படுவதால் ஒரு ஆண்டு காலத்தை இழக்க நேரிடும் என
தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் பள்ளிகள்,
கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதிகள்
உத்தரவிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து கல்வித்துறை சார்பில்
இன்று ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர்
தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும்
எனக் கூறினார். தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,
இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள்
திறப்பு எப்போது என மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்துவ ரும் நிலையில் அரசு
இதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Free Online Test Click Here
Tn Text Book Click Here

Post a Comment

1 Comments

  1. Public exam group https://chat.whatsapp.com/JxFCXa9EBa0BtZ111F9p5S

    Our group channel
    https://www.youtube.com/channel/UCuWfoKpY3jFG0w1S9WAkWRg

    ReplyDelete

*Kalvi Imayam Is Not Responsible For The Comments Here
*Kalvi Imayam Has The Rights To Remove / Delete Your Comments