Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
இலவச ஆன்லைன் தேர்வை முழு மதிப்பெண் பெறும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யுமாறு மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பொதுத் தேர்வு முடிவு
பத்தாம் வகுப்பு மாணவர்க ளுக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செய லகத்தில், செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டு இருக்கும் மடிக்கணினியில், உயர்தர ஆய் வகம் (ஹைடெக் லேப்) மூலம் அனைத்து வித மான பாடப்பிரிவுகளையும் பதிவிறக்கம் செய்து படிப்பதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஒவ்வொரு மாணவரும் சிறந்த முறையில் கல்வியை கற்பதற்கு இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இவையெல்லா வற்றையும் நிறைவேற்றுவதற்கு முதல்வர் உறுதுணையாக இருந்து, கல்வித் துறைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கையில், மும்மொழிக் கொள்கை குறித்து சிறப்பான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், அவற்றில் இருக்கும் சிலவற்றை ஆராய நிபுணர் குழுவும் அமைக் கப்பட உள்ளது. இந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்வு, முதல்வருடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும். அதனை முதல்வரே அறிவிப்பார். குழு அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தான் தேசிய கல்விக்கொள்கை குறித்து அரசு முடிவு எடுக்கும்
ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்து, வாபஸ் பெற்று இருக் கிறோம். அதே நிலைதான் தொடரும்.அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் 10-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல்வர் அறிவிப்பார். பத் தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. மிகவிரைவில் தேர்வு முடிவு வெளி யிடநடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sir this month Kula 10th result varuma
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.