Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இலவச ஆன்லைன் தேர்வை முழு மதிப்பெண் பெறும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யுமாறு மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.
10 தொலைக்காட்சி மற்றும் வகுப்புகளில் விவரங்கள்
வார நாட்களில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்
தொலைக்காட்சி விவரம் ஒளிபரப்பாகும் வகுப்புகள்
- SAHANA TV (பாலிமர் TV) : Class 2,5,7 and 10
- புதுயுகம் TV (புதிய தலைமுறை TV) : Class 10
- வசந்த் TV : Class 3 and 6
- கேப்டன் NEWS : Class 4 and 5
- எஸ் சி வி (SCV) கல்வி : Class 2 to 10
- சத்தியம் TV : Class 3 and 6
- லோட்டஸ் TV : Class 9
- மதிமுகம் TV : Class 8
- மக்கள் TV : Class 2 and 10
- Raj TV : Class 3 and 9
August Month Time Table Click here.
Private TV channels program list Click Here
இலவச ஆன்லைன் தேர்வை முழு மதிப்பெண் பெறும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யுமாறு மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.