ஆன்லைன் தேர்வில் முறைகேடு.

ஆன்லைன் தேர்வில் முறைகேடு.

ரயில்வே ஆன்லைன் தேர்வில் வட இந்தியர்களே அதிகம் தேர்ச்சி பெறுவதாக முறைகேடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார் எனவே  தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாடு, கேரளம், ஆந் திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறையில் 96 சரக்கு ரயில்வே கார்டு பணியிடங்கள் காலியாக இருந்தது. சில மாதங்க ளுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான முடிவுகள் இப் போது வெளியி டப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 96 பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 3000 க்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலை யில், அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்.


தேர்வு செய்யப்பட்ட வர்களில் பெரும்பான்மை யினர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்க வைச் சேர்ந்த பணியாளர் கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது

துறை சார்ந்த இந்தத் தேர்வை ஆன்லைன்னில் நடத்தியது தான் குளறுபடி க்கு காரணம் என போட்டியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுக்கு முன்பு நடைபெற்ற சாதாரண நடைமுறை தேர்வின் போது தமிழர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவே தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் தேர்வு வந்த பிறகு வட இந்தியர்களுக்கு சாதகமாக பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்துவிட்டு பழைய முறையிலான தேர்வை நடத்தினால் மட்டும் தான் இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments