பதினோராம் வகுப்பு புதிய சேர்க்கை கூடாது! புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்.


பதினோராம் வகுப்பு புதிய சேர்க்கை கூடாது! 
புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்.


பிளஸ் வகுப்புக்கு புதிய பாடத்தொகுப்புக்கு அனு மதி பெறாமல் பிளஸ் வகுப்பில் மாணவர்களை சேர்க்க கூடாது என்று பள்ளி ளிக் கல்வித்துறை தெரிவித் துள்ளது இது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார் பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டில் 6 பாடங்களுக்கு 600 மதிப் பெண்களுக்கு பதில் 5 பாடங்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் என்று அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அரசாணை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஏற்ப மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துரை மூலம் உத்தர விடப்பட்டது. அதன்படி மாணவர்கள் ஆங்கிலம் தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்க ளையும் கணக்கு தவிர்த்து ஆங்கிலம், தமிழ், உயிர் அறிவியல், வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்க ளையும் தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் அரசு அறிவித்துள்ள
புதிய பாடத்தொகுப்புக்கு தனியார் பள்ளிகள் அனு மதி வாங்க வேண்டும்


இதை மீறி மே மற்றும் ஜூன் மாதங்களில் மாண வர் சேர்க்கையை நடத்தி விட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் புதிய பாடத் தொகுப்புக்கு அனு மதி கேட்கக்கூடாது. இது அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அந்தந்த மாவட் டங்களில் செயல் படுத் தப்பட வேண்டும் என்று தெரியப்படுத்தியுள்ளது, மாவட்டங்களில் புதிய பாடத்தொகுப்புக்கு அனு மதி பெற்ற பிறகே மாண அவர்கள் சேர்க்க வேண் டும். இதையடுத்து, வரும் கல்வி ஆண்டில் அரசு அறிமுகம் செய்துள்ள புதிய பாடத்தொகுப்புக்கு அனு மதி பெற்ற பிறகே பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க் கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் அங்கீகாரம் காலா வதியான பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்புக்கான அனு மதி வழங்கப்படாது. எந்த ஒரு தனியார் பள்ளிகளும் மாண வர்கள் தேர்வு எழுத இருக்கும் பாடத்தொகுப்புக்கான அனு மதியை கட்டாயம் பெற்றி இருக்க வேண்டும். புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி பெறா மலே பள்ளியை நடத்துவதும் மாணவர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடு ஆகும்

இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments