Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
TVK Manifesto முழு தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள், கல்வி & அரசு ஊழியர் நலன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை
- TVK மக்களின் தேர்தல் அறிக்கை 2026 - Click Here to Download
திருக்குறளை அடிப்படையாக கொண்டு
த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக விஜய் குறிப்பிட்டார்.
- 60 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் இந்த தொகை அளிக்கப்படாது.
- அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்கீழ் 6 விலையில்லாத சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் அளிக்கப்படும்.
- திருமணம் செய்யும் ஏழைப் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், தரமான பட்டுச் சேலை
- தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பேருந்து வசதி
- அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்
- வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வரை உதவித்தொகை,
- 12, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித்தொகை
- தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பிணையில்லாக் கடனுக்கான உத்தரவாதம்
கல்விக்கான உத்தரவாதம்
- 100 காமராசர் சிறப்புப் பள்ளிகள்
- அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் உறைவிடப் பள்ளிகள்
- ஒவ்வொரு மாணவரின் கல்விக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், இளங்கலை முதல் பிஎச்.டி வரை ரூ.20 லட்சம் பிணையில்லாக் கல்விக் கடனுக்கான உத்தரவாதம்
- ஏஐ மூலம் இலவச போட்டித்தேர்வு பயிற்சி
தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
1.மகளிர் மேம்பாடு
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின், மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன்.
2. உலகத்தரக் கல்வி
- உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், ஏஐ மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.
3.சுகாதாரமான தமிழ்நாடு
- குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை,
4. போதைப்பொருள்
- போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
5. சமூகப் பாதுகாப்பு
- முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு. நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.
6. அரசு ஊழியர் நலன்
- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை, ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்
7. இளைஞர் முன்னேற்றம்
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் கடன், அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.
8. விவசாயிகள் நலன்
- நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு.
9. மீனவர் நலன்
- தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு.
10. தமிழ்நாடு வளர்ச்சி
- 2036-க்குள் ரூ.15 டிரில்லியன் பொருளாதாரம், ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐநகரம், MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ’மாஸ்டர் பிளான்’: தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.
11. நல்லாட்சி
- லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில், காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள், நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.
- TVK மக்களின் தேர்தல் அறிக்கை 2026 - Click Here to Download


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.