Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக
வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத்
திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை
நடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை
நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை
மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே
அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக
வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை
அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு
முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில்
பதிவேற்றப்பட்டுள்ளன.
எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை
வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இதனால், திட்டமிட்டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய
அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.