Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 3.1 Book Back Answers
8th Tamil இயல் 3.1 பாடறிந்து ஒழுகுதல்
8th Tamil Unit 3.1 – பாடறிந்து ஒழுகுதல் பகுதியின் புத்தக வினா-விலக்கங்களைத்
தயாரிக்க வேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் எளிய மற்றும்
தெளிவான பதில்களுடன் தயார் செய்யப்பட்ட இவை தேர்விற்கான சிறந்த தயாரிப்பாக
பயன்படும். 8th Tamil Book Back Answers இவை மாணவர்கள் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற உதவும்.
8th Tamil Unit 3.1 Answers, பாடறிந்து ஒழுகுதல் வினா விடைகள், 8th Tamil Book
Back Questions and Answers, Tamil Book Back 2025.
கற்பவை கற்றபின்
1. அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து,
பட்டியலிடுக.
- அன்பு - என்பதுஉறவினர்களோடுவெறுப்பின்றிவாழ்தல்
- வாய்மை - தீங்கு இல்லாத சொல்லை பேசுவது
- நேர்மை - என்பது சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுவது.
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நம்மை __________ பொறுத்துக்கொள்ள வேண்டும்.
- அ) இகழ்வாரை
2. மறைபொருளைக் காத்தல்____________எனப்படும்.
- ஈ) நிறை
3. 'பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________.
- இ) பாடு + அறிந்து
4. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________.
- ஆ) முறையெனப்படுவது
குறுவினா
1. பண்பு, அன்பு ஆகியவை பற்றி கலித்தொகை கூறுவன யாவை?
- சான்றோர் வழி நடத்தல்
- உறவினரோடு வெறுப்பில்லாமல் வாழ்தல்
2. முறை, பொறை என்பவற்றுக்கு கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
- தவறு செய்தவருக்கு சரியான தண்டனை கொடுத்தல்.
- நம்மைத் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்ளுதல்.
சிறுவினா
1.நமக்கு இருக்க வேண்டிய பண்பநலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத்
தொகுத்து எழுதுக.
- ஏழைக்கு உதவுதல், அன்புள்ளவர்களைப் பிரியாது வாழ்தல்,
- அறிஞர் காட்டிய வழியில் நடத்தல், வெறுப்பில்லாமல் உறவினர்களுடன் வாழ்தல்,
- அறிவற்றவர் சொல் பொறுத்தல்,சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றல்,
- மறைபொருள் காத்தல், குற்றம் செய்தவருக்குத் தண்டனை,திட்டுபவரைப் பொறுத்தல்.
சிந்தனை வினா
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவனயாவை?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.