Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 3 Book in Answer New Book - இயல் 3.5 வினைமுற்று
8th Tamil இயல் 3.5 வினைமுற்று Book Back Question and answer 2025
கற்பவை கற்றபின்
1. ‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
எ.கா: அவன் வாழ்க. (ஆண்பால்)
நாம் வாழ்க. (தன்மை )
விடைகுறிப்பு:
பால்கள்
அவள் வாழ்க (பெண்பால்)
அவர்கள் வாழ்க (பலர்பால்)
அது வாழ்க (ஒன்றன் பால்)
அவைகள் வாழ்க (பலவின்பால்)
இடங்கள்:
நீ வாழ்க (முன்னிலை)
அவர்கள் வாழ்க (படர்க்கை)
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது.இத்தொடரிலுள்ள வினைமுற்று ________.
ஈ) மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று____________.
அ) படித்தான்
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ____________.
ஆ) ஓடு
சிறுவினா
1. வினைமுற்று என்றால் என்ன?
- பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.
2.தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
- செய்பவன், கருவி, நிலம் செயல்,காலம் செய்பொருள்.
3.வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
- க .இய, இயர் அல்
4.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று
- முன்னிலையில் வரும்.
- ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
- கட்டளைப் பொருள் உணர்த்தும்.
வியங்கோள் வினைமுற்று
- இரு திணையிலும் வரும்.
- ஒருமை பன்மை வேறுபாடில்லை.
- வாழ்த்துதல் முதலிய பொருளில் வரும்.
நிறுத்தக்குறிகள்
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடைகுறிப்பு:
- 1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
- 2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
- 3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது.
- 4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்.
- 5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும் நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம்,ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
விடைகுறிப்பு:
நூல் பல கல் என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம்,ஊர்ப்புற நூலகம். எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்.
கீழ்காணும் விளம்பரத்தை படித்து வினாக்களுக்கு விடையளி
1. எந்த நாளை முன்னிட்டு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது?
- புத்தகக் காட்சி உலக புத்தக நாளை முன்னிட்டு நடத்தப்படுகிறது
2. புத்தகக் காட்சி எங்கு நடைபெறுகிறது?
- இராயப்பேட்டை YMCA மைதானம்
3. புத்தகக் காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
- ஏப்ரல் 13 முதல் 23 வரை
4. புத்தகக் காட்சிக்கான நுழைவு கட்டணம் எவ்வளவு?
- அனுமதி இலவசம்
5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
- 10% கழிவு
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
1. கட்டுரை
நூலகம்
முன்னுரை
நூலகத்தின் தேவை
வகைகள்
நூலகத்தில் உள்ளவை
படிக்கும் முறை
முடிவுரை
விடைகுறிப்பு:
முன்னுரை:
- நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
நூலகத்தின் தேவை:
- பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் நூல்களை இலவசமாகப் படிக்கவும் குறிப்பெடுக்கவும் நூலகம் தேவைப்பட்டது.
வகைகள்:
- மாவட்ட மைய நூலகம்,
- மாவட்ட கிளை நூலகம்,
- ஊர்ப்புற நூலகம்
- எனப் பலவகை நூலகங்கள் உள்ளன
நூலகத்தில் உள்ளவை:
- கதை கவிதை, கட்டுரை, அறிவியல் நூல்க மாத இதழ்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன. வார இதழ்கள்,
படிக்கும் முறை:
- நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்துபடிக்க வேண்டும்.
- நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது.
முடிவுரை
- நூலகம் தேடிச் சென்று, நாடி நூல்களைப் படிப்போம் உயர்வோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.