Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி காலம் நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி காலம் நீட்டிப்பு – அரசாணை வெளியீடு! |
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3,660 தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பணிக்காலம் நீட்டிப்பு:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் 3000 தலைமை ஆசிரியர் மற்றும் 2,460 முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 2,760 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் 2026 ஆம் வரை நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 2011 – 2013 ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் 900 தற்காலிக ஆசிரியர்களின் பதவி காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான ஊதியம் மாதந்தோறும் தாமதம் என்று கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.