Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
NEET UG தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2023
தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட்தேர்வை மே 7ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. 2023ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவு தேர்வு மதியம் 2 மணி முதல் 5.30மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவிற்குள் 499 நகரங்களில் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 14 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப படிவ எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வின் காலம் மூன்று மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகும். இதில் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 720 மதிப்பெண்களைக் கொண்ட 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் NBE இணையதளமான natboard.edu.in ஐப் பார்வையிட வேண்டும் முகப்புப் பக்கத்தில், NEET UG Admit Card 2023 என்பதைத் கிளிக் செய்யவும். விண்ணப்ப படிவ எண், பிறந்த தேதி மற்றும் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் Admit Card 2023 திரையில் திறக்கப்படும், அதையே சென்று பதிவிறக்கவும் எதிர்கால குறிப்புக்கு அதன் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.