Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Result date Announced 2023
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத் தேர்வுகள் மார்ச் ஏப்ரல் 2023
தேர்வு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு
மேல்நிலை இரண்டாமாண்டு (2) மார்ச் 2023 பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
- வகுப்பு: 12
- தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் 08.05.2023
- மேல்நிலை இரண்டாமாண்டு (2)
- (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு
இணையதள முகவரி
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக் தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இடம்: சென்னை.6
நாள்: 04.2023.
இயக்குநர்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.