Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
7th Tamil Notes of Lesson January 3rd Week
7th Standard Tamil Notes of Lesson download pdf. class 7 Tamil model notes of lesson January month 2023.
- நாள் : 18-01-2023 முதல் 21-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : மூன்றாம் வாரம்
- வகுப்பு : ஏழாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. அணி இலக்கணம்
அறிமுகம் :
- உங்களை நீங்கள் எவ்விதம் அழகு செய்து கொள்வீர்கள்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
- கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
- அணியால் சுவை பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்தல்.
ஆசிரியர் குறிப்பு (ஆசிரியர் செயல்பாடு):
- அணிப் பற்றிக் கூறல்
- அணி என்னும் சொல்லுக்கு அழகு
- உவமை அணி பற்றிக் கூறல்
- எடுத்துக்காட்டு உவமை அணியை கூறல்
- இல்பொருள் உவமையணியை கூறல்
நினைவு வரைபடம் :
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
- அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்
- உவமை அணி : ஒரு பாடலில் உவமையும்,உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் உவமை அணி
- உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் எடுத்துக்காட்டு உவமை அணி
- உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி
காணொளிகள் :
- விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
- இலக்கணம் என்பதனை அறிதல்
- அணி என்பதன் பொருள் அறிதல்
- உவமைஅணி பற்றி அறிதல்
- எடுத்துக்காட்டு உவமையணி பற்றி அறிதல்
- இல்பொருள் உவமையணி பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
- அணி என்பதன் பொருள் யாது?
- உவம உருபுகள் கூறுக.
MOT
- உவமை அணியை விளக்குக.
- எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்குக.
HOT:
- தொடர்களில் உவமை, உவமேயம்,உவம உருபு இவற்றைக் காண்க.
- மலரன்ன பாதம்
- தேன் போன்ற மொழி
- மயிலொப்ப ஆடினாள் மாதவி
கற்றல் விளைவுகள் :
அணி இலக்கணம்
- T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
தொடர் பணி :
- பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
- நீ அறிந்த வேறு அணிக் கொண்ட பாடலை எழுதி வருக.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.