Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
6th Tamil Notes of Lesson January Month 3rd Week
6th Standard Tamil Notes of Lesson January Month 3rd Week model lesson plan download pdf.
- நாள் : 18-01-2023 முதல் 21-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : மூன்றாம் வாரம்
- வகுப்பு : ஆறாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. பராபரக்கண்ணி
அறிமுகம் :
- இராமலிங்க வள்ளலார் நிகழ்வுகள் சிலக் கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
- காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
- எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற சிந்தனைகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
- பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
- செய்யுள் பகுதியினை பிழையின்றி வாசித்தல்
- புதியச் சொற்களை இனம் காணல்
- புதியச் சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் காணுதல்
- பாடலின் மையக் கருத்தைக் கூறல்
- பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
- மனப்பாடப் பாடலை சீர் பிரித்து வாசிக்க வைத்து மனனம் செய்ய வைத்தல்
கருத்துரு வரைபடம் :
பராபரக் கண்ணி
விளக்கம் :
பராபரக்கண்ணி
- ஆசிரியர் : தாயுமானவர்
- பணி :தலைமைக் கணக்கர்
- இந்நூல் தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுகிறது.
- அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்.
- தொண்டு செய்பவராக ஆகிவிட்டால் இன்ப நிலை வந்து சேரும்.
- எல்லோரும் இன்பமாக வாழ்வேண்டும் அதை தவிர வேறு எதுவும் நினைக்க மாட்டேன்.
காணொலிகள் :
- விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
- பாடப்பகுதியினை வாசித்தல்
- சீர்ப் பிரித்து வாசித்தல்
- புதிய சொற்களை அடையாளம் காணுதல்
- புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
- பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்
- பாடலை மனனம் செய்தல்
மதிப்பீடு :
LOT :
- சோம்பல் எதிர் சொல் தருக
- பராபரக்கண்ணியை எழுதியவர் யார்?
MOT :
- யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
- இன்பநிலை எப்போது வந்து சேரும்?
HOT
- குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
- மற்ற உயிரினங்களுக்கு எவ்விதம் உதவுவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
பராபரக்கண்ணி
- T619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது சொந்த மொழியில் எழுதுதல்
தொடர் பணி :
- பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
- பிறரை மகிழ்விக்கும் செயல்களை எழுதி வருக.

.webp)

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.