10th Tamil Half Yearly Exam Important Questions - 8 Mark Questions

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Tamil Half Yearly Exam Important Questions - 8 Mark Questions

10th Half Yearly Exam Question Paper Answer Key 2022
  • 10th Tamil Half Yearly Model, Original Questions, Answer keys, Study Materials - Click Here
  • 10th Tamil Half Yearly Exam Important Questions - 8 Mark Questions - Click Here
  • 10th Tamil Half Yearly Exam Important Questions - 5 Mark Questions - Click Here
  • 10th Tamil Half Yearly Exam Important Questions - 3 Mark Questions - Click Here

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  20
( உரை நெடு வினாக்கள் )


வினா எண் : 43

  • 1. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
  • 2. வீட்டில் திண்ணை அமைத்த காரணம்,விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.
  • 3. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா?வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி விவரித்து எழுதுக.
  • 4.     நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்த உங்கள் கருத்துகளை நாளிதழ் ஒன்றிற்கான ‘ தலையங்கமாக ‘ எழுதுக.
  • 5.     காற்று பேசியதுப் போல நிலம், நீர்,வானம் பேசுவதாகவும் அவை இன்றைய சுற்றுச் சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துவதாகவும் ஓர் உரையாடல் அமைக்க.
  • 6.     மூன்று நிகழ்கலை கலைஞர்களை நேர்முகம் கண்டு அவர்களது கருத்துகளையும் அவர்களது மறுவாழ்விற்கான வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றையும் குறிப்பிட்டு எழுதுக.
  • 7.     ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்காக சிறு கட்டுரை ஒன்றினை எழுதி,கட்டுரையின் சுருக்கத்தைச் சுவரொட்டியாக வடிவமைத்துத் தருக.
  • 8.     தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைக் குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை விரிவாக எழுதுக.
  • 9.     உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர், தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
  • 10.   சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறங்களைத் தொகுத்து,அவை இன்றும் தேவையே என்பதனை நிறுவுக.
  • 11.     எழுத்தாளர் ஜெயகாந்தனின் இன்னொரு முகம் குறித்தும் அவரிடம்,’ தொடுத்த கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்களுமாக’, ஜெயகாந்தன் குறித்து அறிந்தவற்றை விளக்குக.
  • 12.   தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு ‘ நடுப்பக்கக் கட்டுரை ‘ க்கான செய்திகளை எழுதுக.

( விரிவான நெடு வினாக்கள் )
வினா எண் : 44

  • 1.      குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.
(மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி)
  • 2.     நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா:
இடம் : பள்ளிக் கலையரங்கம்                                                     நாள் : 08-03-2019
               கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – சிறப்பு விருந்தினர் இதழாளர் – கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத்தலைவரின் நன்றியுரை.
  • 3.     பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயல்.’ அன்னமய்யா’ புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதை வழி விளக்கி எழுதுக.
  • 4.     “ புயலிலே ஒரு தோணி “ கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன என்பதைக் கதைவழி சுவைபட விவரிக்க.
  • 5.     “ பாய்ச்சல் “ சிறுகதையில் அழகுவின் கதாப்பாத்திரம் போல், நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல்வேடக் கலைஞர் குறித்த நிகழ்வுகளை ஒப்பிட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதுக.
  • 6.     சூழலுக்கேற்ற உரையாடல் ஒன்றினை எழுதுக.
சூழல் : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ்மொழியைப் பேச மட்டுமே தெரியும்,ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்
  • 7.     ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
  • பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
  • 8.     “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ஒரு விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்றினை எழுதுக.
  • 9.     அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
  • 10.   ‘ என் மக்கள் அனைவருக்கும்  நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் ‘ என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
  • 11.     அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.
  • 12.   நீங்கள் அறிந்த அறிவியல் அறிஞர்களின் கூற்றுகளை ஒப்பிட்டு அவை ஸ்டீபன் ஹாக்கின் கருத்துகளோடு ஒத்திருப்பதைச் சுவைபட விளக்குக.

பொதுக் கட்டுரை
வினா எண் : 45

  • 1.     குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். 
  • இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
  • 2. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
  • முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை
  • 1.      குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
  • முன்னுரை – மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் - முடிவுரை
  • 2.     நீங்கள் சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.
  • 3.     ‘ விசும்பின் துளியும் பசும்புல் தலையும் ‘ என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை ஒன்று எழுதுக.
  • குறிப்புகள் : முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – வானத்து மழைநீரைப் பூமியில் காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை
  • 4.     குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதித் தலைப்பிடுக.
  • குறிப்புகள் : முன்னுரை – தமிழர் பண்பாட்டில் விருந்து – தமிழர் உணவு முறை – விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் மகுடம் – முடிவுரை.
  • 5.     குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பு ஒன்று தருக.
  • குறிப்புகள் : முன்னுரை – தமிழன் அறிவியலின் முன்னோடி – விண்வெளியும் கல்பனாச் சாவ்லாவும் – விண்ணியல் அறிவில் நமது கடமை – முடிவுரை
  • 6.     உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்
  • -              இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.
  • 7.     குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
  • குறிப்புகள் : முன்னுரை – மொழிபெயர்ப்பு நூல்கள் – எட்டுத்திக்கின் கலைச் செல்வங்கள் கொண்ர்ந்திங்கு சேர்ப்பீர் – மொழிபெயர்ப்பும் கல்வியே – முடிவுரை
  • 8.     உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரையாக்குக.
  • குறிப்புகள் : முன்னுரை – பொருள்காட்சி நடைபெறும் இடம் – பல்வேறு விளையாட்டு அமைப்புகள் – பலவிதமான வணிகம் – அரசின் நலத்திட்ட அரங்குகள் – மகிழ்வூட்டும் மக்கள் கூட்டம் – பாரம்பரிய நிகழ்கலைகள் – முடிவுரை.
  • 9.     விசும்பின் துளியும் பசும்புல் தலையும் – காற்று மாசு – பசுமையைக் காப்போம் – மரம் நமக்கு வரம் – மழை நீர் உயிர் நீர்
  • -              இக்குறிப்புகளைப் பயன்படுத்தி ‘ இயற்கையைக் காப்போம் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
  • 10.   குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று படைக்க.
  • குறிப்புகள் : முன்னுரை – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் – அறவாழ்வே பண்பாட்டின் உச்சம் – அறம் என்பதே மனிதம் – முடிவுரை.

நெடு வினா ( உரைநடை மற்றும் விரிவானம் நெடு வினா - எட்டு  மதிப்பெண் ) புத்தக வினாக்கள்

( செய்யுள் நெடுவினா – 5 மதிப்பெண் )

இயல் – 1

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்
  வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
  மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

3 ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

இயல் – 2

1. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

2. புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?

3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

            வளரும் விழி வண்ணமே – வந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

            நடந்த இளந்தென்றலே – வளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

            பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

இயல் – 3

1. ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்

  கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

3 உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

இயல் – 4

1               ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

2             நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….

3             “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

இயல் – 5

1 இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

2 ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

3 தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை -

            மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

இயல் – 6

1 நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

2 நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

3. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

இயல் – 7

1. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

3. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்

  அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் – பள்ளிக் கலையரங்கம்                                                                நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.

இயல் – 8

1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

                                    கவிஞன் யானோர் காலக் கணிதம்
                                    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
                                    புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
                                    பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
                                    இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
                                    இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
                                    ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
                                    அவனும் யானுமே அறிந்தவை;அறிக!

-         கண்ணதாசன்.

3. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

            மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

இயல் – 9

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக.
  மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

2. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு
  சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

3. அழகிரிசாமியின் “ ஒருவன் இருக்கிறான் “ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
  மாந்தர் குறித்து எழுதுக.

பொதுக் கட்டுரை வினாக்கள் ( எட்டு  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

1 குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

            இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

2 “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

3 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.