1st to 5th Term 1 Exam Date Announced

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

1st to 5th Term 1 Exam Date Announced 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேதி அறிவிப்பு!


எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. 

தற்போது பார்வையில் காணும் கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது. இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு (CD) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

ஆகவே. இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022-க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1st to 5th Term 1 Exam Date Announced  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேதி அறிவிப்பு


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.