தமிழகத்தில் 12, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம்!
10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை
#BREAKING | 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
10ம் வகுப்பு தேர்வு முடிகள் நாளை வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12.00 மணிக்கும், அதேபோன்று 12ஆம் வகுப்பை பொருத்தவரையில் ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகல்வித்துறை அமைச்சர் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி தள்ளி போவதால் 11ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 📲 How to Check 10th Result 2022 https://youtu.be/5uOM88Ruyks
- 📲 How to Check 12th Result 2022 https://youtu.be/Km4kVHXarsI

Post a Comment
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.