தமிழக பள்ளிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியவை – அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது ஜூன் 13ல் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிகளுக்கான செயல்முறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் தற்போது அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி அடுத்து வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்றும் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்களுக்கான சில முக்கிய செயல்முறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

  • 1. அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வரும்போது மாணவர்கள் காலையில் 8.30 மணியளவில் பள்ளிக்கு வர வேண்டும். இதையடுத்து சிற்றுண்டி வழங்கப்பட்ட பின் வகுப்புகள் 9 மணிக்கு தொடங்கும்.
  • 2. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, பாடப்புத்தகம், உள்ளிட்டவை பள்ளி தொடங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும்.
  • 3. மேலும் அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்த அறிவிப்பை அடுத்த கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளது.
  • 4. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு அனுமதி, மருத்துவ விடுப்பு உள்ளிட்டவை செல்போன் மூலம் விண்ணப்பிக்க செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 5. தமிழகத்தில் வருகிற கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி அன்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி அன்றும் பொதுத்தேர்வு தொடங்கும்.
  • 6. மாணவர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, கல்வி இணைச் சான்று, புலம்பெயர்வு சான்று உள்ளிட்ட 25 வகையான சான்றிதழை பொதுச் சேவை மையங்கள் மூலமாக பெறலாம்.
  • 7. மாணவர்களின் பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் அனைத்து பதிவேடுகளும் மின் பதிவேடுகளாக மாற்றப்படும்.
  • 8. அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் பெற வேண்டிய அடிப்படைத் திட்டம் சார்ந்ததன் விருப்ப பயிற்சிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post