Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
NMMS Exam Date Announced 2022
NMMS Exam Date Announced by TN government. Those who are studying in 8th standard for the academic year 2021-22. eligible candidate for this examination exam. date exam 05.03.2022 fees rupees 50 for more details contact your school headmaster.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்-2022 விண்ணப்பங்கள் வரவேற்பது - செய்தி வெளியிடக் கோருதல் - சார்பு.
2021-22-ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 05.03.2022 (சனிக்கிழமை ) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொருட்டு அதன் தொடர்பான செய்தி அறிவிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
இச்செய்தியினை பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுமாறும் வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். "இது விளம்பரம் அல்ல” எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம்!- இயக்குநர் இணைப்பு: செய்திக் குறிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, 2022 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) செய்திக் குறிப்பு
2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2022 மார்ச் மாதம் 05-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 05.03.2022 (சனிக்கிழமை). இத்தேர்விற்க்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
பொதுவான அறிவுரைகள்: -
தேர்வர்கள் (NMMS) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் (Mask)அணிந்து வரவேண்டும். - போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம். ஓம்- இயக்குநர் நாள். 11.01.2022 சென்னை-600 006.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.