12th Tamil Revision Test Important Questions 2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

12th Tamil Revision Test 

Important Questions 2022

12th Tamil Revision Test Important Questions 2022. 12th Tamil Revision Test Important 2 Marks, 12th Tamil Important 4 Marks, 12th Tamil Important 6 Marks.


12th Tamil Revision Test Important Questions 2022

12th Tamil Important 2 Marks

  • 1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
  • 2. நிலையாமை குறித்து சபரி உரைக்கும் கருத்து யாது?
  • 3. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' விளக்கம் தருக.
  • 4. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக
  • 5.புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக
  • 6. ஏதேனும் ஒன்றுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) விளங்கி  ஆ) பொலிந்தான்
  • 7. வல்லின மெய்கள் இட்டும், நீக்கியும் எழுதுக அ) இரட்டைக்கிளவி சொற்களை சேர்த்து எழுத வேண்டும். ஆ) சொல்லுக்கானப் பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்தப் பயிற்சியாகும்.
  • 8. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. தலை, தளை, தழை
  • 9.உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைக்க. உள்ளங்கை நெல்லிக்கனி போல
  • 10.கலைச்சொல்லாக்கம் தருக.  -- subscription -- Bibiliography
  • 11.மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.  -- - கலை, களை, கழை
  • 12.பிழை நீக்கி எழுதுக.  -- அ)ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது. -- ஆ)அனைத்து பள்ளியிலும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
  • 13.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. ( என்னுடைய நம்பிக்கை முழவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சனைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர் கொண்டுத் தீர்ப்பார்கள்)
  • 14.அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
  • 15.தாய்வழிக்குடும்பம், தந்தைவழிக்குடும்பம் என்பது யாது?
  • 16. கலை முழுமை என்றால் என்ன ?
  • 17. வசனம். கவிதை வேறுபாடு தருக.
  • 18. அக்காலத்துக் கல்விமுறையில் மனைப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?
  • 19. காற்புள்ளியிடாமல் எழுதுவதால் ஏற்படும் பொருள் யக்கத்திற்குச் சான்று கூறுக.
  • 20. புணர்ச்சி விதி கூறுக : அருங்கானம்
  • 21. ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முக்கத்தொடர் வாயிலாக வெற்றை வலியுறுத்து
  • 22, 'படாஅம் கத்த கெடாஅ நல்லிசைக் கடாசு யானைக் சுலிமான் பேச் இச்சங்கக் கவிதையின் களில் ஓசை நாயிக்க பொற்களையும் அவற்றிறமன இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுது.
  • 23. உறுப்பிலக்கணம் தருக. கலங்கி
  • 24. உறுப்பிலக்கணம் தருக உயள்ந்தோர்
  • 25. கூதிர் பாசரை என்றால் என்ன?
  • 26. புதுப்பெயல் - புனர்ச்சி விதி தடுக
  • 23. உத்தம சோழனின் புதின நூல்கள் யாவை?
  • 24. நகரம் பட்டை திட்டிய வெள்ளை வைரமாகிறது. விளக்குக.
  • 25. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?
  • 26 கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
  • 27. அக்காலத்துக் கல்வி முறையில் மனணப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
  • 28. கிணற்றுத்தவளை போல, அச்சாணி இல்லாத தேர் போல உவமைத் தொடர்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக.
  • 29. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. விலை, விளை, விழை
  • 30. திருவளர்ச் செல்வன், திருவளர்செல்வன் - இவற்றில் சரியான தொடர் எது?. அதற்கான இலக்கண விதி யாது?.
  • 31. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. i) ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு,  ii) அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
  • 32. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?.
  • 33. சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க. அ) கோவில் ஆ) தலைமை
  • 34. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக  அ) பூம்பாவாய் ஆ) ஒருமையுடன்
  • 35. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.  அ) உயர்ந்தோர் ஆ)பேசுவார்
  • 36. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.  அ. புள்ளைக்கு உடம்பு சரியில்லை முணு நாளா சிரமப்படுது  ஆ. நிலத்தை கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.

12th Tamil Important 4 Marks

  • 1. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
  • 2. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக.
  • 3. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவர் ஆன நிகழ்வுகளை சுட்டி காட்டுக.
  • 4. பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
  • 5. தமிழாக்கம் தருக
I) A new language 'is new life.
II) Leaming is a treasure that will follow its owner everywhere.
III) Art is long and life is short.
IV) Haste makes waste.
  • 6. 'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்'
இத்தொடர் வெளிப்படுத்தும் காட்சிநயத்தை விளக்குக.
  • 7. நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்"
இக்கவிதையின் அடி "தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே எனும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை விளக்குக.
  • 8. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் விளக்கி எழுதுக.
  • 9. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவி யாது?
  • 10. "வருபவர் எவராயினும் நன்றி செறுத்து'' - இடஞ்சுட்இப் பொருள் விளக்கு.
  • 11. வெண்பாவின் இலக்கணம் கூறி அதன் வகைகளைக் குறிப்பிடுக.
  • 12. சொற்பொருள் பின்வரு நிலையணியைச் சான்றுடன் விளக்குக.
  • 13. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
  • 14. சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
  • 15. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
  • 16. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?.
  • 17. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
  • 18. மையாடல் விளக்குக.
  • 19. பொருள் வேற்றுமை அணியை விளக்குக?
  • 20. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  • பண்பும் பயனும் அது
  • இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
  • 21. தழிழாக்கம் தருக.
  • 22. யானைக்கும் அடி சறுக்கும்
  • 23. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்திக் காட்டுக.
  • 24. பா நயம் பாராட்டுக
வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது
கொட்டி பிடிக்குது மேகம் --கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா . என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா.

12th Tamil Important 6 Marks

  • 1. உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்று இணையாமல் இருந்திருந்தால்.... கதையை தொடர்ந்து எழுதி முடிக்க.
  • 2. விதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளைச் சான்று காட்டி விளக்குக.
  • 3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
  • 4. ரதியின் கடிதம் வாயிலாக நீவிர் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று குறித்து விவரிக்க
  • 5. பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் போல் நும் நண்பருக்குக் கொரோனா விழிப்புணர்வு குறித்துக் கடிதம் எழுதுக.
  • 6. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
  • 7. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
  • 8. செய்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
  • 9. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
  • 10. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக.
  • 11. "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" உங்கள் கருத்தை விவரிக்க

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.