Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
7th Tamil Refresher Course Answer key
Topic 7. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியின் இலக்கண நுட்பங்கள் அறிதல்
7th Tamil Refresher Course Answer key Topic 7 அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியின் இலக்கண நுட்பங்கள் அறிதல். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF.
- Class: 7
- Subject: Tamil Refresher Course Answer key
- Topic: 7. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியின் இலக்கண நுட்பங்கள் அறிதல்
- மதிப்பீட்டுச் செயல்பாடு - 7
7th Tamil Refresher Course Answer key Topic 7. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியின் இலக்கண நுட்பங்கள் அறிதல்
7th Tamil Refresher Course Answer key Topic 7
மதிப்பீட்டுச் செயல்பாடு
சலசலக்கும் நீரோடையில் பயந்து பயந்து மான் ஒன்று மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்து மசமசவென நிற்காமல் மடமடவென நீர் பருகியது. அங்கே பதுங்கிப் பதுங்கி வந்த புலி ஒன்று திகுதிகு எனத் தீப்பொறி தெறிக்கும் கண்களால் குறுகுறுவென மானைப்
பார்த்தது. தொலைவில் இருந்து இதனைக் கண்ட இருவர் வெலவெலத்துப் போய்க்
கால்கள் வெடவெடவென நடுநடுங்கப் 'புலி புலி' என கத்தவும் துணிவின்றிச்
செய்வதறியாது திருதிருவென விழித்தனர். அப்போது முதலைக்குட்டி மெதுவாய் நீந்திவர, புலியின் கவனம் சற்றே சிதறியது. அச்சமயம் மரக்கிளை சடசடவென முறிந்தது.
1. இப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி சொற்களை எடுத்து எழுதவும்.
அடுக்குத் தொடர்:
- பயந்து பயந்து
- பதுங்கிப் பதுங்கிப்
- புலி புலி
இரட்டைக் கிளவி :
- சலசல
- மலங்க மலங்க
- மசமச
- மடமட
- திருதிரு
- குறு குறு
- வெலவெல
- வெடவெட
- சடசட
2. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(சலசல, கலகல, மளமள)
- மிட்டாயைப் பார்த்ததும் குழந்தை கலகல எனச் சிரித்தது.
- ஆற்றில் நீர் சலசல என ஓடியது.
- நேரமாகிவிட்டதால் சங்கவி மளமளவென வீட்டுப்பாடங்களை என்று எழுதினாள்.
3. தொடர் அமைத்து எழுதுக.
அ. கொழுகொழு ஆ. நன்று நன்று
அ ) எங்கள் வீட்டு நாய்க்குட்டி கொழுகொழு வென இருக்கிறது.
ஆ ) எனது சேமிக்கும் பழக்கத்தைக் கேட்டு ஆசிரியர் நன்று நன்று எனப் பாராட்டினார்.
4. 'வெடவெடத்து பாம்பு பாம்பு' ஆகிய இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் இரண்டையும் சேர்த்துப் பொருளுள்ள ஒரு தொடராக எழுதுக.
- பாம்பைக் கண்டதும் ' பாம்பு பாம்பு ' என அலறியடித்து ஓட உடம்பு ' வெடவெடத்துப் ' போனது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.