12th Commerce Refresher Course Answer Key Topic 14. குறுகிய கால தொழில் நிதி ஆதாரங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 14. குறுகிய கால தொழில் நிதி ஆதாரங்கள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 14. குறுகிய கால தொழில் நிதி ஆதாரங்கள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 14. குறுகிய கால தொழில் நிதி ஆதாரங்கள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 14

மதிப்பீட்டு வினா விடைகள்:

1.குறுகிய கால நிதி ஆதாரங்கள் என்றால் என்ன ?

  • ஒரு வருட காலத்திற்குள் தொழில் நிறுமங்களுக்கு தேவைப்படும் நிதியே குறுகிய கால நிதி ஆகும்.

2.பந்தகக் கடன் மற்றும் அடமானக் கடன் இவைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடு யாது?


அடகு கடன்பந்தகக் கடன்
தனக்கு சொந்தமான பொருளை அடகு வைத்து பெறப்படும் கடன்அசையும் சொத்துகளின் மூல ஆவணங்களை கடனாளரிடம் அடகு வைத்து பெறப்படும் கடன்
கடன் திரும்ப செலுத்தும் வரை பொருள் கடனாளர் வசமே இருக்கும்.பொருளின் உரிமை கடனாளர் வசம் இருப்பினும் கடன் திரும்ப செலுத்தும் வரை பொருள் கடனாளி வசமே இருக்கும். கடனாளி பொருளை பயன்படுத்த எந்த தடையும் இல்லை.
கடன் திரும்ப செலுத்த தவறினால் கடனாளர் ஏலம் விட்டு தனக்கான தொகையைப் பெற உரிமை உண்டுகடன் திரும்ப செலுத்த தவறினால் கடனாளர் ஏலம் விட்டு தனக்கான தொகையைப் பெற உரிமை உண்டு

3.வங்கி மேல்வறைப் பற்று - குறிப்பு வரைக

  • வங்கி மேல்வரைப்பற்று என்பது வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்புக்கணக்கில் வரவில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை எடுத்துப்பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு ஆகும்.
  • எவ்வளவு தொகை கடனாகப் பெறப்படுகிறதோ அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.

4.வங்கிகளுக்கு சென்று வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களைப் பற்றிக் கேட்டறிந்து ஒரு கட்டுரை வரைக.

  • ஒரு வருட காலத்திற்குள் தொழில் நிறுமங்களுக்கு தேவைப்படும் நிதியே குறுகிய கால நிதி ஆகும். குறுகிய கால நிதியாக வங்கி வழங்கும் சில கடன்களைப் பற்றி இங்கு நாம் காண்போம்.

கடன்களும் முன் பணங்களும்

  • கடன் என்பது கடன் கோருபவரின் கடன் கணக்கில் ஒட்டுமெ தக்கடன் தொகையையும் ஒரே வீச்சில் வரவு வைக்கப்பட்ட தொகையைக் குறிக்கும்.
  • கடன் பெறுநர் அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொ அனைத்தையும் ஒட்டு மொத்தமாக பெற்று பயன்படுத்துகிறார்.
  • கடன் பெற்ற தொகையை ஒன்று அல்லது ன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்துகிறார்.
  • ஆனால் இந்தக் கடனுக்காக வட்டி, கடன் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து திருப்பி அடைக்கும் நாள் வரையிலா காலத்திற்கு மொத்தக்கடன் தொகையின் மீது கணக்கிடப்படும்.
வங்கி மேல்வரைப்பற்று
  • வங்கி மேல்வரைப்பற்று என்பது வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்புக்கணக்கில் வரவில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை எடுத்துப்பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு ஆகும்.
  • எவ்வளவு தொகை கடனாகப் பெறப்படுகிறதோ அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.
மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்
  • சரக்குகளைக் கடன் அடிப்படையில் விற்கும்போது, விற்பவர் வாங்குபவரின் பேரில் மாற்றுச்சீட்டை எழுதுகிறார்.
  • மாற்றுச்சீட்டு சராசரியாக 15நாள் முதல் அதிகபட்சம் 180நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையறுக்கப்படுகிறது.
  • இந்நிலையில் சரக்கைக் கடனுக்கு விற்ற விற்பனையாளர் மாற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு முன்பாக பணத்தைப்பெற முடியாத நிலையில் உள்ளார்.
  • எனவே அந்த நிலையில், மாற்றுச்சீட்டை தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் தள்ளுபடி செய்து, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்.
வியாபாரக்கடன்
  • வியாபாரக்கடன் என்பது ஒரு வணிகர் பிறிதொருவருக்கு சரக்கு மற்றும் சேவையைப் பெறுவதற்காகத் தருகின்ற கடனைக் குறிக்கும். அதாவது தரப்படும் கடன் வாங்கிய பொருளுக்கான தொகையைப் பொருளை வாங்குபவர் உடனே செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட தவணை காலத்திற்குள் பிறகு செலுத்த அனுமதிக்கப்படுகிறார் எனலாம்.
  • உடனடியாக வாங்கிய பொருட்களும் / சரக்குகளுக்கு பணம் செலுத்தாமல், அதனை ஒரு சில தவணைகளில் செலுத்த வகை செய்யும் ஏற்பாடே தொழில்கடன் ஆகும்.
அடகுகடன்
  • கடன் பெறுநர் அவரச நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனக் சொந்தமான பொருளைக் கடன் வழங்குநரிடம் அடகு வைத்துக்கடன் பெறுகிறார்.
  • கடனை திருப்பிச் செலுத்தும்வரை அடகு வைக்கப்பட்ட பொருள் கடனாளரிடமே இருக்கும்.
  • கடனாளி கடனை திருப்பி அடைக்கதவறினால், கடனாளர் தகுந்த முன்னறிவிப்பை கடனாளிக்கு கொடுத்துவிட்டு, அடகு வைத்த பொருளை ஏலம் விடுவார்.
  • ஏலம் விடுவதன் மூலம் பெறப்பட்ட தொகையைக் கடனுக்கும் மற்றும் அதற்குண்டான வட்டிக்கும் எடுத்துக்கொண்டு மீதி தொகை ஏதும் இருப்பின் அதைக் கடனாளிக்கு வழங்குவார்

பந்தகக்கடன்
  • பந்தகக்கடன் என்பது அசையும் சொத்துக்களின் மூல ஆவணங்களை கடனாளிடம் அடகு வைத்து பெறப்படும் கடனாகும்.
  • அடகு கடனில் சொத்தின் உட மையை வைத்து கடன் பெறப்படுகிறது.
  • மாறாக பந்தகக் கடனில் சையும் சொத்தின் மூலம் ஆவணங்களை ஈடாக கொடுத்து கடன் பெறப்படுகிறது.
அடமானம்
  • அசையா சொத்தினை ஈடாக வைத்து நிதி திரட்டும் முறைக்கு அடமானம் என்று பெயர்.
  • கடனாளி நிலம், கட்டிடம் போன்ற அசையாச் சொத்தின் உரிமை ஆவணங்களைக் கடனாளரிடம் பிணையமாக ஈந்து கடனைப் பெறுவார்.
  • கடன் தொகை முழுவதும் திருப்பி அடைத்த பிறகு ஈடாக கொடுத்து பிணையங்களைக் கடனாளி திரும்பப்பெறலாம்.
பிணையக்கடன்
  • நிலைவைப்பு இரசீது, ஏட்டுக்கடன், காப்பீட்டு திட்ட ஆவணங்கள், அளிப்பு இரசீது, பங்குகள், கடன் பத்திரங்கள், நிறும் முறிகள், சரக்குரிமை ஆவணங்கள், ரயில் இரசீது, கப்பல் தலைவர் இரசீது, பொறுப்பான்மையின் இரசீது, பண்டக இரசீது போன்ற சரக்குரிமை ஆவணங்களைக் கடனாளியிடமிருந்து பிணையமாகப் பெற்றுக்கொண்டு வழங்கப்படுகின்ற கடனுக்கு பிணையக்கடன் என்று பெயர்.
தூயக்கடன் / பிணையமற்ற கடன்
  • தூய / பிணையமற்ற கடன் என்பது எவ்விதமான பிணையங்களையும் ஈடாகப் பெறாமல் கடன் பெறுநரின் குணநலன்கள், திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் அவரின் செயல் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுவதாகும்.
வணிகத்தாள்
  • வாக்குறுதித்தாளின் வடிவத்தில் எவ்விதப் பிணையமும் இல்லாமல் நிறுமங்களால் பணச்சந்தையில் வெளியிடப்படும் ஓர் ஆவணத்திற்கு வணிகத்தாள் என்று பெயர்.
  • கூட்டுப்பங்கு நிறுமங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு பெற்ற முதன்மை முகவர்கள் மற்றும் அனைத்திந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை வணிகத்தாளை வெளியிட தகுதி பெற்ற நிறுவனங்களாகும்.

5.அடகு கடன் என்றால் என்ன ?

  • கடனாளி தனக்கு சொந்தமான பொருளை கடனாளரிடம் அடகு வைத்துக் கடன் பெறுவது அடகு கடன் ஆகும்.


***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.