11th Tamil Refresher Course Answer key Topic 5 பகுபத உறுப்புகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

11th Tamil

Refresher Course Answer key 

Topic 5 பகுபத உறுப்புகள்


11th Tamil Refresher Course Answer key Topic 5 பகுபத உறுப்புகள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.

Refresher Course Answer Key

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 5  பகுபத உறுப்புகள் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 5  பகுபத உறுப்புகள்

11th Tamil Refresher Course 5. பகுபத உறுப்புகள் 
Answer key 2021-2022

மதிப்பீடு

1. பதம் என்பதன் வரையறை யாது?

  • ஓர் எழுத்து தனித்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால்  அது பதம் எனப்படும்.
சான்று :   மா  , மாமரம் 

2. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு . அவை , 
  • பகுதி 
  • விகுதி 
  • இடைநிலை 
  • சந்தி
  • சாரியை 
  • விகாரம் 

3. விகுதி என்றால் என்ன?

  • சொல்லின் இறுதியில் நின்று திணை , பால் , எண் , இடம் காட்டுவதாக அமைவது விகுதி எனப்படும்.
படித்தான் - படி + த் + த்  + ஆன்
  • திணை  - உயர்திணை
  • பால்   -  ஆண்பால் 
  • எண்  - ஒருமை 
  • இடம்  - படர்க்கை 

4. பாடுகிறாள் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பாடுகிறாள்  - பாடு + கிறு + ஆள்
  • பாடு  - பகுதி 
  • கிறு  - நிகழ்கால இடைநிலை
  • ஆள்  - பெண்பால் வினைமுற்று விகுதி

5. எழுத்துப்பேறு வரையறு.

எழுத்துப்பேறு:
  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும். சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப் பேறு.
சான்று :
  • செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ
  • த் - எழுத்துப்பேறு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.