7th Tamil TN SCERT Assignment Answers

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

7th Tamil TN SCERT 
Unit 1 Assignment 2021
 Full Answer Key 

7th Tamil Assignment Answers. 7th Standard TN SCERT Assignment Answers, 7th Tamil Unit 1 TN SCERT Answer key 2021. 7th Standard All Subject TN SCERT Assignment Unit 1 Answers. TN SCERT Announced 1st to 12th All Subject Assignment Worksheets for Unit 1. Students Can Note that 7th Tamil Unit 1 TNSCERT Assignment.  

7th Tamil TN SCERT Unit 1 Answers

7th Standard Tamil Unit 1 TN SCERT Assignment Answer key.

7th Tamil TN SCERT Unit 1 Answers

ஒப்படைப்பு

  • வகுப்பு - 7
  • பாடம்: தமிழ்
  • இயல்: 1
பகுதி அ

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

இயல்-1


1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1. தமிழ்மொழியின் குறிக்கோளாக வெ.இராமலிங்கனார் கூறுவது யாது?

அ) பொய்யாமை 
ஆ) கொல்லாமை
இ) எள்ளாமை
ஈ) தள்ளாமை
விடை : ஆ ) கொல்லாமை


2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

அ) வெ.இராமலிங்கனார் 
ஆ) ஈ.வெ.இராமசாமி
இ) பாரதியார்
ஈ) இராமலிங்க அடிகளார்
விடை : அ ) வெ.இராமலிங்கனார்


3. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது எது?

அ) பெரு+செல்வம்
ஆ) பெருஞ்+செல்வம்
இ) பெரிய+செல்வம்
ஈ) பெருமை+செல்வம்
விடை :  ஈ ) பெருமை +  செல்வம்


4. முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரிவான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி- 

இவ்வடிகளில் 'வள்ளல்' என்னும் பொருள் தரும் சொல் யாது?
அ) கொடுத்தான்
ஆ) உபகாரி
இ) முகில்
ஈ) வேல்பாரி
விடை :  ஆ ) உபகாரி 


5. மொழியின் இரண்டாம் நிலை யாது?

அ) பேசுதல், எழுதுதல்
ஆ) கேட்டல், பேசுதல்
இ) படித்தல், எழுதுதல்
ஈ) உணர்தல், பேசுதல்
விடை : இ ) படித்தல் , எழுதுதல்


6. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும் - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

(அ) நன்னூல் 
ஆ) தொல்காப்பியம் 
இ) ஒன்றல்ல இரண்டல்ல 
ஈ) எங்கள் தமிழ்
விடை :  அ ) நன்னூல்

7. குறில் எழுத்துகளைக் குறிப்பதற்குப் பயன்படும் அசைச்சொல் யாது?

அ) காரம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கேனம்
விடை  :  ஆ ) கரம்

8. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) பட்டு
ஆ) கன்று 
இ) பந்து
ஈ) சங்கு
விடை :  ஆ ) பட்டு

9. தற்போது உரைநடை வழக்கில் இல்லாத இலக்கணம் எது?

அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம் 
ஈ) ஐகாரக்குறுக்கம்
விடை : ஆ ) குற்றியலிகரம்

10. குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும்போது பெறும் மாத்திரை அளவு யாது?

அ) ஒன்று
ஆ) இரண்டு 
இ) கால்
ஈ )  அரை
விடை : ஈ ) அரை

                                 பகுதி - ஆ

II. குறுவினா

1. வெ.இராமலிங்கனார், ஏன் காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்?

  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

2. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள் சிலவற்றைக் எழுதுக.

  • மலைக்கள்ளன்
  • நாமக்கவிஞர் பாடல்கள்
  • என் கதை 
  • சங்கொலி 

3. ஒன்றல்ல இரண்டல்ல-பாடலில் இடம்பெற்றுள்ள நூல்களின் பெயர்களைக் கூறுக.

  • பரணி 
  • பரிபாடல் 
  • கலம்பக நூல்கள் 
  • எட்டுத்தொகை 
  • திருக்குறள்

4. மொழியின் முதல்நிலை யாது?

                 வாயினால்  பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.

5. தமிழை இரட்டைவழக்கு மொழி என அழைக்கக் காரணம் யாது?

தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. இதுவே  , தமிழை இரட்டை வழக்கு மொழி என அழைக்கக் காரணம் ஆகும்.

6. எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

           எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
அவை ,  1 . முதலெழுத்து 
                  2 . சார்பெழுத்து 


7. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் ஏதேனும் ஒன்றனைத்

தேர்ந்தெடுத்துச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
    அதிர அதிர அடிச்சா உதிர விளையும் அது மாதிரி முயற்சி செய்தால் எல்லாம் சிறப்பாக முடியும்.

                                பகுதி - இ

III. பெருவினா

1. உடுமலை நாராயணகவி குறித்துக் குறிப்பு வரைக.

  • பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
  • தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் , நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

2 ) சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.அவை :
1 ) உயிர்மெய் 
2 ) ஆய்தம் 
3 ) உயிரளபெடை
4 ) ஒற்றளபெடை 
5 ) குற்றியலுகரம் 
6 ) குற்றியலிகரம்
7 ) ஐகாரக்குறுக்கம்
8 ) ஔகாரக்குறுக்கம்
9 ) மகரக்குறுக்கம்
10 ) ஆய்தக் குறுக்கம்.

                  பகுதி - ஈ 

IV . செயல்பாடு 

பின்வரும் பாடலைப்படித்து , வினாக்களுக்கு விடையளிக்க.
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே !
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே !
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே ! 
உணர்வினுக் குணர்வ தாய் ஒளிர்தமிழ் மொழியே !
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே !
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !
தானனி சிறப்புறும் தனித்தமிழ் மொழியே !
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே !
வினக்கள்.
1 ) தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள்:
  நற்செந்தமிழ் மொழியே ! 
 தென்மொழியே !
ஒண்டமிழ் மொழியே ! 
ஒளிர்தமிழ் மொழியே !
நன்மொழியே !
தனித்தமிழ் மொழியே !
தண்டமிழ் மொழியே !
2 ) எதுகை நயம் .
தேனினும்   - னி -  எதுகை
ஊனினும்
வானினும் 
3 ) வண்டமிழ் - பிரித்து எழுதுக.
வண்மை + தமிழ் 
4 ) நம் செந்தமிழ் மொழி ------- விட இனிமையானது.
விடை : தேனை விட 
5 ) மக்களுக்கு மொழி இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வரி.
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.