10th Tamil Unit 3 July Month Assignment Answer key

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Tamil Unit 3 

July Month Assignment Answer key
10th Tamil Unit 3 July Month Assignment Answer key

10th Standard Tamil July Month Assignment Answer key,  TN SCERT, 10th Assignment Answer key Unit 2, Unit 3. Kalvi TV Assignment Answer key.  ASSIGNMENT 1 QUESTION & ANSWER KEY TN SCERT

10th Tamil Unit 3 Assignment Answer key, Question paper July Month


10th Tamil Unit 3 Assignment Answer key

 

  • 10th Tamil ஒப்படைப்பு
  • இயல்-3 |  பண்பாடு

10th Tamil Unit 3 Assignment Answer key


பகுதி-அ


  • வகுப்பு-10
  • பாடம்:தமிழ்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. விருந்தொடு உண் இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு

அ) இல
ஆ) இன் 
இ) ஒடு
ஈ)ஆல்

2. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க


அ) உணவிடுதல்
ஆ) உரையாடுதல்
ஆ) தங்கவைத்தல் 
ஈ) விருந்தோம்பல்

3.உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க 

அ) பண்புத் தொகை 
ஆ) வினைத்தொகை
இ) வேற்றுமைத்தொகை 
ஈ)அன்மொழித்தொகை

4. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?

அ) ஒளவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) இளங்கோவடிகள் 

5. தனித்து உண்ணாமை என்பது.

அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல் 
ஆ) உணவளிக்கும் முறை
இ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்
ஈ) விருந்தினரை வரவேற்றல்

6. Classical Literature orodrugl

அ) வட்டார இலக்கியம் 
ஆ)நாட்டுப்புற இலக்கியம்
இ) செவ்லிலக்கியம்
ஈ) பண்டைய இலக்கியம்

7. செப்பல் என்பதன் பொருள்.

அ) வருதல் 
இ) சிந்துதல்
ஆ) அழுதுதல்
ஈ)உரைத்தல்

8. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நுல்

அ)குறுந்தொகை 
ஆ) திருமுருகாற்றுப்படை 
இ) மலைபடுகடாம்
ஈ) நற்றிணை

9. நும் இல் போல நில்லாது புக்கு இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?எது?

அ) இலவம்
இ) இல்லம்
ஆ) இலை
ஈ) இல்லை

10. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க

அ) கேட்டவர் பாடல்
இ)கேட்டுப் பாடினார்.
ஆ) கேட்ட பாடல்
ஈ) கேட்டார் பாடினார்

பகுதி-ஆ


II.குறுவினா


11. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?

    “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறுகிறது நற்றிணை .

12. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக

    “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்கிறது பெரியபுராணம் .

13. அதிவீரராம பாண்டியர் -குறிப்பு வரைக.

  • பெயர் : அதிவீரராம பாண்டியன்
  • சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
  • பட்டப் பெயர் : சீவலமாறன்
இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?

ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.
அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.
இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

15. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.

முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
சான்று : பாடி மகிழ்ந்தனர்.

பகுதி-இ


III.சிறுவினா


16. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க 


  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

17. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக

முன்னுரை:
    அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றுப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.
உணவு:
    அன்றைய பாணர்கள் கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.
கல்வி:
    கல்வி கற்க முடியாதவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பலர் வழிகாட்டல் செய்கின்றனர்.
தொழில்:
    இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு போக்கப்படுகின்றது.
நன்னடை:
    சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய்ய இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.
முடிவுரை:
    வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.