10th Tamil Unit 2 July Month Assignment Answer Key

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Tamil 

July Month Assignment 

Unit 2 Answer Key
10th Tamil July Month Assignment Unit 2 Answer Key

10th Standard Tamil Unit 2 July Month Assignment Answer key. ஒப்படைப்பு 2, இயல்- 2- இயற்கை, சுற்றுச் சூழல். ASSIGNMENT 1 QUESTION & ANSWER KEY TN SCERT
10th Tamil Unit 2 Assignment Answer key
 • வகுப்பு: பத்து
 • பாடம்: தமிழ்
 • ஒப்படைப்பு 2
 • இயல்- 2- இயற்கை, சுற்றுச் சூழல்

பகுதி-ஆ


L ஒரு மதிப்பெண் வினாக்கள்


1 உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படையான சூழல் எது?

அ)மலை
ஆ) இயற்கை
இ) கடல்
ஈ) காடு

2. கடுங்காற்று என்பதன் எதிர்ச்சொல் தருக.

அ) கடல் காற்று
ஆ) மென்காற்று
இ) சுழல்காற்று
ஈ) புயல் காற்று

3.வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனப் பாடியவர் யார்?

அ) ஒளவையார்.
ஆ)பாரதியார்
இ) திருவள்ளுவர்
ஈ. இளங்கோவடிகள் 

4. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்

அ) இருத்தல்
ஆ) இரங்கல்
இ) ஊடல்
ஈ. புணர்தல்

5. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது? 

அ) நெடுநல்வாடை 
ஆ) திருமுருகாற்றுப்படை
இ) பட்டினப்பாலை
ஈ. முல்லைப்பாட்டு 

6. கரும்பு தின்றான் என்பது எவ்வகைத் தொடர்?

அ)வினையெச்சத் தொடர்
ஆ) தொகை நிலைத் தொடர்
இ) தொகாநிலைத் தொடர்
ஈ) விளித்தொடர்

7. மூதூர் - இலக்கணக் குறிப்பு தருக.

அ) வினைத் தொகை
ஆ) பண்புத்தொகை

8. மை விகுதி பெறும் தொகை

அ) பண்புத்தொகை
ஆ) வேற்றுமைத் தொகை
இ) உவமைத் தொகை 
ஈ) உம்மைத் தொகை

9.கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் படைப்பு எது ?

அ) அழகின் சிரிப்பு
ஆ) பாண்டியன் பரிசு
இ) பாஞ்சாலி சபதம்
ஈ) குடும்பவிளக்கு

10. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) மு. மேத்தா
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதியார்
ஈ) நாகூர் ரூமி

பகுதி-ஆ


II. குறுவினா

11. வசன கவிதை - குறிப்பு வரைக.

 • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்.
 • கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
 • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்.
 • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.
சான்று :
 • இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடையது காற்றும் இனிது – பாரதியார்

12. காற்றைச் சிறப்பித்து ஒளவையார் எவ்வாறு பாடியுள்ளார் ?

“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று ஒளவையார் பாடியுள்ளார்

13. நான்கு திசைகளிலிருந்து வீசக் கூடிய காற்றின்களை எழுதுக.

திசைகள் வேறு பெயர்கள்
கிழக்கு குணக்கு
மேற்கு குடக்கு
வடக்கு வாடை
தெற்கு தென்றல்

14. மரம் தரும் வரமாக காற்று கூறுவது யாது?
 • நானே! நீர்
 • உலகில் முக்கால் பாகம் நான்
 • நான் இல்லை என்றால் உலகம் இல்லை
 • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
 • மேகமாய் வளர்ந்து
 • மழையாய் பிறப்பேன் நான்
 • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
 • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
 • மலையில் விழுந்து
 • நதியில் ஓடி
 • கடலில் சங்கமிக்கும்
 • சரித்திர நாயகன் நான்.

15.விரிச்சி விளக்கம் தருக.

 • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,
 • தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
 • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.
 • தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.

பகுதி - இ


III. நெடுவினா


16. காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?


17. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.


மழை:
 • மேகம் அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.
தெய்வ வழிபாடு:
 • முதுபெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்த முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
கன்றின் வருத்தம்:

 • சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.
வருந்தாதே :
 • புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டி வந்துவிடுவார் வருந்தாதே’ என்றாள் இடைமகள்.
முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :
 • இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டோம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.