10th Tamil QUESTION ANSWERS

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Tamil QUESTION ANSWERS
10ம் வகுப்பு தொகைநிலைத் தொடர்கள் - வினாக்கள் / Kalvi Imayam 

10 ம் வகுப்பு  கற்கண்டு -  தொகைநிலைத் தொடர்கள்  - வினாக்கள்
இயல் -  2             ப.எண் : 40

1. சொற்றொடர்( அ)  தொடர்  என்றால் என்ன ?
சொற்கள் பல தொடர்ந்து நின்று  பொருள் தருவது " சொற்றொடர் " (அ )    "தொடர் "  எனப்படும் .
எ.கா :  நீர் பருகினான் .
            வெண்சங்கு ஊதினான்  .

2 . தொகைநிலைத்தொடர் என்றால் என்ன ?
  பெயர்ச் சொல்லோடு வினைச்சொல்லும்  பெயர்ச்சொல்லும் இணைந்து வரும் தொடரின் இடையில் , 
வேற்றுமை உருபுகளோ , வினை , பண்பு  முதலியவற்றின் உறுப்புகளோ  தொக்கி ( மறைந்து) ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகாநிலைத்தொடர் என்று கூறுவர் .

எ.கா ; கரும்பு தின்றான்.  - இத்தொடரில் ' ஐ ' என்னும் உருபு மறைந்துள்ளது .  

3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ? அவை யாவை  ?
தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும் .
1. வேற்றுமைத்தொகை
2.  வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

4.  வேற்றுமை தொகை என்றால் என்ன ?
ஒரு தொடரில் வேற்றுமை உறுப்புகள் ( ஐ ,ஆல் ,கு ,இன் ,அது , கண் )  ஏதேனும் ஒன்று மறைந்து  பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும் .
எ.கா :  மதுரை சென்றார் .
இத்தொடரில் ' கு '  என்னும் வேற்றுமை உருபு  மறைந்து  வந்து , "மதுரைக்குச் சென்றார் "  என பொருள் தருகிறது .

5. உருபும் பயனும் உடன் தொக்க தொகை  என்றால் என்ன ?
ஒரு தொடரில்  வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து   மறைந்து வருவது  உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும் .
எ. கா :   தேர்ப்பாகன்
   இத்தொடர்  " தேரை ஓட்டும் பாகன் " என பொருளை உணர்த்துகிறது .
இதில்   ' ஐ ' என்ற வேற்றுமை உருளும் ' ஓட்டும் ' என்ற  பயனும்  மறைந்து வந்துள்ளது .

6. வினைத்தொகை என்றால் என்ன ?
            காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும்   மறைந்து நிற்க ,வினைப் பகுதியைத் தொடர்ந்து  ஒரு சொல்லைப் போல நடப்பது "  வினைத்தொகை " எனப்படும் .  காலம் காத்த  பெயரெச்சமே  வினைத்தொகை ஆகும் .
எ.கா :  வீசுதென்றல் , கொல்களிறு

7 .  வினைத்தொகை  எவ்வாறு அமையும் ?
1.வினைப்பகுதியும்  அடுத்துப் பெயர்ச்சொல்லும்  அமைந்த சொற்றொடர்களிலேயே  வினைத்தொகை அமையும் .
2 .முக்காலத்திலும்  பொருந்தும்படி பிரிந்து பொருள் தரும் .
வீசுதென்றல் - வீசிய ,வீசுகின்ற , வீசும் .
3 . காலம் காட்டும் இடைநிலைகள் பெயரெச்சங்களில்  தொக்கி இருக்கின்றன .

8.  பண்புத்தொகை என்றால் என்ன ?
  நிறம் , வடிவம் , சுவை , அளவு  முதலானவற்றை உணர்த்தி ,  பெயர்ச் சொல்லுக்கு இடையில் " மை " என்னும்  பண்பு விகுதி  மறைந்து வருவது  பண்புத்தொகை எனப்படும் .
எ.கா : இன்மொழி -   இனிமையான மொழி
செங்காந்தள் -  செம்மையாகிய காந்தள்

8 . இருபெயரொட்டு பண்புத்தொகை என்றால் என்ன ?
சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று  இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு  தொக்கி வருவது   இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும் .
எ.கா :  மார்கழி திங்கள் ,  சாரைப்பாம்பு

9 . உவமைத்தொகை என்றால் என்ன ?
உவமைக்கும் பொருளுக்கும் (  உவமேயம் )  இடையில் உவம உருபு மறைந்து வருவது  உவமைத்தொகை எனப்படும் .
பெ.கா :  மலர்க்கை ( மலர்போன்ற கை )

10. உம்மைத்தொகை என்றால் என்ன  ?
இருசொற்களுக்கு  இடையிலும்  இறுதியிலும் " உம் "  என்னும் இடைச் சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும் .
எ.கா :  அண்ணன் தம்பி , தாய் சேய்

11. உம்மைத்தொகையின் வகைகள் யாவை ?
1. எண்ணல்  2. எடுத்தல் 3 . முகத்தல் 4   நீட்டல்   என   உம்மைத்தொகை நான்கு வகைப்படும் .

12. அன்மொழித்தொகை என்றால் என்ன ?
வேற்றுமை , வினை , பண்பு  ,  உவமை ,  உம்மை  ஆகிய தொகைநிலைத் தொடர்கள் ,  அவை அல்லாத  சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது  அன்மொழித்தொகை ஆகும் .
எ.கா :   சிவப்புச் சட்டை அணிந்தவர் .
முறுக்கு மீசை உடையவர் .



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.