New Education Policy புதிய கல்விக் கொள்கை குறித்து 3ம் தேதி முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

New Education Policy 



100% 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை
100% மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்
100%       5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன,  ஆறாம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்

மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே
5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்; அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது.

தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.

இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உயர் கல்வித்துறைச் செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.



2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.

 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.

புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.

மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாயப்பு அளிக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய மென்பொருட்கள் உருவாக்கப்படும்.

 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும்.

12-ம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படும்.

பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.

சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த வாரியம் அமைக்கப்படும்.

எம்.பில். படிப்பு நிறுத்தப்படுகிறது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்.

கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.

பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.

புதிய கல்விக்கொள்கை 22 மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் மாற்றம்

புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு

மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக் கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள் ளது. அது, பிரீ கே.ஜி., முதல், பிளஸ் 2 வகுப்பு

வரை விரிவு படுத்தப்படுகிறது

தற்போதுள்ள படுகிறது. இனி 5 + அமல்படுத்தப்படும் 3 என்ற முறை புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3

10+முறை மாற்றப் வயது வரை, அடித்தள நிலை என, முதல் ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து 1 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப் பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12 ம் வரை உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்க லாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா

சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே

சேர்க்கப்படும் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும்

மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர் களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன் மையே பரிசோதிக்கப்படும்

தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியும் டன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்

கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும் மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்க

டியை தரும் வகையில் இருக்காது மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருத தத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.